துணிவு படத்திற்கு நள்ளிரவு 1 மணி காட்சிக்கு திடீர் அனுமதி கொடுத்த மாவட்ட ஆட்சியர்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

'துணிவு' படத்தின் நள்ளிரவு காட்சி புதுவையில் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
 

The District collector gave permission for the 1 am screening of thunivu movie

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பண்டிகையை முன்னிட்டு நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்காக நள்ளிரவு 1 மணி காட்சி திரையிட ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், இதற்கு புதுவை மாவட்ட ஆட்சியர் வல்லவன் சிறப்பு காட்சியை ரத்து செய்வதாக அறிவித்தார்.

இதனால் பல ரசிகர்கள் 1 மணி காட்சிக்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு, காலை படம் திரையிடப்படும் என கூறப்பட்டது. எனினும் அடுத்தடுத்து ரசிகர்கள் 'துணிவு' படத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்ததால், அவர்களின் காட்சி நேரமும் தொடர்ந்து மாற்றப்படும் என மாவட்ட ஆட்சியரிடம் ரசிகர்கள் தரப்பில் இருந்தும், திரை அரங்க உரிமையாளர் தரப்பில் இருந்தும் கோரிக்கை வைகாப்பாத்து.

The District collector gave permission for the 1 am screening of thunivu movie

இதை அடுத்து நள்ளிரவு ஒரு மணி காட்சியை திரையிட ஆணையர் மீண்டும் அனுமதி கொடுத்தார். மேலும் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அடுத்து அஜித் படத்தை ஒரு மணிக்கு பார்க்க வேண்டும் என ஆசைப்பட்ட புதுவை ரசிகர்களின் ஆசை நிறைவேறி உள்ளதால் இதனை கொண்டாடி வருகின்றனர்.


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios