SAC வாழ்வில் முக்கியமான நாள்... கேக் வெட்டி கொண்டாடிய விஜய்யின் தந்தை - தளபதி மட்டும் மிஸ்சிங்
SA Chandrasekar : இயக்குனர் எஸ்.ஏ.சி தனது பிறந்தநாளை தனது மனைவி சோபா உடன் கேட் வெட்டி கொண்டாடி உள்ளார். அதன் புகைப்படத்தையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
தமிழ் திரையுலகில் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக வலம் வருபவர் விஜய். இவரை சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்தியது இவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தான். இவரது இயக்கத்தில் விஜய் நடித்த மாண்புமிகு மாணவன், விஷ்ணு, செந்தூரப்பாண்டி, ஒன்ஸ் மோர், நாளைய தீர்ப்பு ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதோடு, விஜய்யின் நடிப்பு திறமையையும் படிப்படியாக உயர்த்தியது.
இதையும் படியுங்கள்... கிளாமரா போட்டோஷூட் நடத்துனது இதுக்குத்தானா..! பிரம்மாண்ட வாய்ப்பை தட்டித்தூக்கிய ரச்சிதா- வாழ்த்தும் ரசிகர்கள்
இதையடுத்து தனது கடின உழைப்பால் படிப்படியாக உயர்ந்த நடிகர் விஜய், இன்று உச்ச நட்சத்திரமாக உயர்ந்து உள்ளார். நடிகர் விஜய்க்கும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் சமீப காலமாக மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பேசாமல் இருந்து வருகின்றனர். விஜய் தன்னை சந்திக்க கூட வருவதில்லை என இயக்குனர் எஸ்.ஏ.சி ஒரு பேட்டியில் உருக்கமாக பேசி இருந்தார்.
இதையும் படியுங்கள்... தனுஷின் அடுத்த அதிரடி..வெளியானது கேப்டன் மில்லர் பார்ட்ஸ் லுக்!
இந்நிலையில், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று தனது 81வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக ஏராளமான ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக விஜய் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வந்தனர்.
இதையும் படியுங்கள்... அப்படியெல்லாம் நடிக்காதீங்க..செட்டாகல..ரசிகரின் வேண்டுகோளை ஏற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்!
இயக்குனர் எஸ்.ஏ.சி தனது பிறந்தநாளை தனது மனைவி சோபா உடன் கேட் வெட்டி கொண்டாடி உள்ளார். அதன் புகைப்படத்தையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள், இதற்கும் விஜய் வரவில்லையா என கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலரோ விஜய்யின் போட்டோ பின்னணியில் இருப்பதை பார்த்து ஆறுதல் அடைந்து வருகின்றனர். பிரச்சனையெல்லாம் மறந்து நடிகர் விஜய் மீண்டும் அவரது தந்தையுடன் பேச வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது.