தனுஷின் அடுத்த அதிரடி..வெளியானது கேப்டன் மில்லர் பார்ட்ஸ் லுக்!
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கவுள்ள கேப்டன் மில்லர் படத்தின் முதல் பார்வை வீடியோ வடிவில் வெளியாகியுள்ளது.
தனுஷ் தற்போது நானே வருவேன், திருச்சிற்றம்பலம் , வாத்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இத்துடன் தற்போது கேப்டன் மில்லரும் சேர்ந்துள்ளது. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்குகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் 1930கள் சார்ந்த கதைக்களமாகும். தனுஷ் கேங்ஸ்டராக நடிக்கும் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகிறது. இதிலுருந்து பர்ஸ்ட் லுக் ரிலீசாகி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு...3டி தொழில்நுட்பத்தில் சியான் படம் ! ரஞ்சித் - விக்ரம் கூட்டணியின் சூப்பர் அப்டேட் இதோ!
இந்த வீடியோவில் நாயகன் தனுஷ் முகத்தை துணியால் கட்டியபடி தனது கேங்குடன் பைக்கில் வருகிறார். இந்த பர்ஸ்ட் லுக்கை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அருண் மாதேஸ்வரன் செல்வராகவன் சமீபத்தில் நடித்த சாணி காகிதம், ராக்கி உள்ளிட்ட படங்களை இயக்கையாவர்.
மேலும் செய்திகளுக்கு...விக்ரம் லைஃப் டைம் வசூல் எவ்வளவு தெரியுமா?..20 வது மிகப்பெரிய இந்திய திரைப்படம் இது தானாம்?
பான் இந்தியா நாயகனாக மாறிவிட்ட தனுஷின் தொடரி, பட்டாஸ், மாறன் உள்ளிட்ட படங்களை தயாரித்த சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மலையாள ஆக்டர் விநாயகன் வில்லன் ரோலில் ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் மற்ற நடிகர்கள், நடிகைகள், படக்குழு குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என தெரிகிறது.
மேலும் செய்திகளுக்கு...அப்படியெல்லாம் நடிக்காதீங்க..செட்டாகல..ரசிகரின் வேண்டுகோளை ஏற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்!
தனுஷ் தற்போது நடித்து முடித்துள்ள திருச்சிற்றம்பலம் படங்களின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதிலிருந்து சமீபத்தில் பாடல் மற்றும்கிளிப்ஸ் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதேபோல தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கம் நானே வருவேன் இறுதியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. வாத்தி படத்தின் மூலம் நேரடியாக டோலிவுட்டில் கால் பதித்துள்ள தனுஷ் அதில் மாணவன், ஆசிரியர் வேடம் தரித்துள்ளதாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதோடு ஹாலிவுட்டிலும் தன கால் தடத்தை பதித்துள்ள தனுஷ் அங்கு தி கிரே மேன் படத்தில் நடித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் இந்த படம் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.