கிளாமரா போட்டோஷூட் நடத்துனது இதுக்குத்தானா..! பிரம்மாண்ட வாய்ப்பை தட்டித்தூக்கிய ரச்சிதா- வாழ்த்தும் ரசிகர்கள்
Rachitha Mahalakshmi : நடிகை ரச்சிதா, பட வாய்ப்புகளை பிடிப்பதற்காகவே இவ்வாறு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி வருவதாக கூறப்பட்டது. அதன்படியே நடிகை ரச்சிதாவுக்கு தற்போது பிரம்மாண்ட வாய்ப்பு கிடைத்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்கிற சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் ரச்சிதா மகாலட்சுமி. இதையடுத்து புகழ்பெற்ற சரவணன் மீனாட்சி தொடரில் நடிகர் ரியோவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மிகவும் பேமஸ் ஆன இவர், தினேஷ் என்பவரை கடந்த 2015-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இதையும் படியுங்கள்... சூர்யா தயாரிப்பில் சாய் பல்லவி நடித்துள்ள கார்கி பட ரிலீஸ் தேதி!
திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்தார் ரச்சிதா, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடிகர் செந்திலுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகி அதிர்ச்சி கொடுத்தார். அதுமட்டுமின்றி கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரையும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... மை டியர் பூதம் கெட்டப்பிற்காக முடியை இழந்த பிரபு தேவா ! வேற லெவல் வீடியோ இதோ!
தற்போது சொல்ல மறந்த கதை என்கிற சீரியலில் நடித்து வரும் ரச்சிதா, சமீபகாலமாக சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இயங்கி வருகிறார். கணவரை பிரிந்ததும் கவர்ச்சிக்கு தாவிய இவர், விதவிதமான கிளாமர் உடைகளில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.
இதையும் படியுங்கள்... விக்ரம் டீமுக்கு..தனித்தனியாக வாழ்த்து சொன்ன தெலுங்கு சூப்பர் ஸ்டார்!
ரச்சிதாவை பெரும்பாலும் புடவை அணிந்தபடியே பார்த்த ரசிகர்கள், அவரின் கவர்ச்சி அவதாரத்தை பார்த்து வாயடைத்துப் போயினர். அவர் பட வாய்ப்புகளை பிடிப்பதற்காகவே இவ்வாறு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி வருவதாக கூறப்பட்டது. அதன்படியே நடிகை ரச்சிதாவுக்கு தற்போது பிரம்மாண்ட வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் தற்போது வெப் தொடர் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அந்த வெப் தொடர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ரச்சிதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.