விக்ரம் டீமுக்கு..தனித்தனியாக வாழ்த்து சொன்ன தெலுங்கு சூப்பர் ஸ்டார்!

விஜய் சேதுபதி, பகத் பாசில், அனிருத்தை டேக் செய்து,: விக்ரம் மூலம் பிரமிக்க வைக்கும் நடிப்பு இதைவிட சிறப்பாக அமையாது என மகேஷ் பாபு கூறியுள்ளார்.

Telugu Superstar mahesh babu  Congratulates to kamal haasan Vikram Team

பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பி வருகிறது விக்ரம். தரமான சம்பவமாக  அமைந்து விட்ட விக்ரம் கமலின் நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு வெளியான படமாகும். இந்த படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் சிரஞ்சீவி, சல்மான் கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதோடு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், யானை படக்குழு என பலரும் வாழ்த்து கூறி இருந்தனர்.

Telugu Superstar mahesh babu  Congratulates to kamal haasan Vikram Team

அந்த வரிசையில் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவும் இணைந்துள்ளார். தனது முதல்ட்வீட்டில் இயக்குனர் லோகேஷை டேக் செய்துள்ள மேகேஷ் பாபு, "விக்ரம் பிளாக்பஸ்டர் சினிமா!! ஒரு புதிய வயது வழிபாட்டு கிளாசிக். விக்ரமின் முழு செயல்முறையையும் மனதை நெகிழ வைக்கிறது...பரபரப்பான விஷயங்கள் அண்ணா" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..பட வாய்ப்புகள் குறைந்ததால்...மீண்டும் அண்ணனுடன் 2-ம் பாகத்தில் இணைய திட்டமிட்ட ஜெயம் ரவி!

அடுத்த ட்வீட்டில்..விஜய் சேதுபதி, பகத் பாசில், அனிருத்தை டேக் செய்து,: விக்ரம் மூலம் பிரமிக்க வைக்கும் நடிப்பு இதைவிட சிறப்பாக அமையாது! ஆஹா! என்ன ஒரு மியூசிக்கல் ஸ்கோர்!  இது நீண்ட காலமாக எனது பிளேலிஸ்ட்டில் முதலிடம் வகிக்கப் போகிறது..பிரகாசிக்கவும்! என எழுதியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..விக்ரம் லைஃப் டைம் வசூல் எவ்வளவு தெரியுமா?..20 வது மிகப்பெரிய இந்திய திரைப்படம் இது தானாம்?

 

கடைசி பதிவில் " இறுதியாக புராணத்தைப் பற்றிகமல்ஹாசன் நடிப்பைப் பற்றி கருத்து சொல்ல போதுமான தகுதி இல்லை. சார் உங்களுக்கும் உங்கள் அருமையான குழுவிற்கும் வாழ்த்துக்கள். என கூறியுள்ளார் மகேஷ் பாபு.

 

மேலும் செய்திகளுக்கு... தனுஷின் அடுத்த அதிரடி..வெளியானது கேப்டன் மில்லர் பார்ட்ஸ் லுக்!

விஜய் சேதுபதி, பகத்பாசில், சூர்யா உள்ளிட்டோரின் காம்போவில் விருந்து கொடுத்த விக்ரம் உலகளவில் சுமார் 419  கோடியை வாரிசுருட்டியுள்ளதாகவும், அதிக வசூல் செய்த இந்திய சினிமா வரிசையில் முதல் 20 இடங்களுக்கு நகர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீடான இந்த படத்தை கமலின் ராஜ் கமல் இன்டெர்நேஷனல் தயாரித்துள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios