மை டியர் பூதம் கெட்டப்பிற்காக முடியை இழந்த பிரபு தேவா ! வேற லெவல் வீடியோ இதோ!
பிரபுதேவா நடிப்பில் யுங் மங் சங், பகீரா, ஊமை விழிகள், முசாசி, ஃப்ளாஷ் பேக், மை டியர் பூதம், பொய்க்கால் குதிரை, ரெக்லா உருவாகி வருகிறது. இதில் மை டியர் பூதத்திற்காக சிகை அலங்காரத்தை மாற்றும் வீடியோவை பிரபு தேவா சமூக வலைதளப்பக்கம் பகிர்ந்துள்ளார்.
நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முக திறைமை கொண்டவர் பிரபு தேவா. இவர் நடிப்பில் 90 களில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. நடன கலைஞர் குடும்பத்தை சேர்ந்த இவரது தந்தை முகூர் சுந்தர், சகோதரர்கள் ராஜு சுந்தரம், நாகேந்திர பிரசாத் ஆகியோரும் நடன இயக்குனர்களாக உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு... தனுஷின் அடுத்த அதிரடி..வெளியானது கேப்டன் மில்லர் பார்ட்ஸ் லுக்!
பிரபு தேவா தமிழோடு, இந்தி, தெலுங்கு மொழி படங்களில் மாஸ் காட்டி வருகிறார். இவர் சிறந்த நடன அமைப்பிற்கான இரண்டு தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும் நடனத்திற்கான அவரது பங்களிப்புகளுக்காக அவருக்கு பத்மஸ்ரீ விருது கடந்த 2019 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
காதலன், மின்சார கனவு, விஐபி உள்ளிட்ட படங்கள் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. பின்னர் . காதலா காதலா, வானத்தைப் போல , பெண்ணின் மனதைத் தொட்டு, அல்லி தந்த வானம் உள்ளிட்ட ரசிகர்கள் விரும்பும் கதைக்களத்தில் நடைத்திட்டார் மாஸ்டர் பிரபுதேவா.
மேலும் செய்திகளுக்கு... அந்தேரியில் அனன்யா பாண்டே..குட்டை டவுசரில் கலங்கடிக்கும் பாலிவுட் நாயகி !
இயக்குனராக முதலில் தெலுங்கு 'நுவ்வோஸ்தானந்தே நேனோடந்தனா', பௌர்ணமியை தொடர்ந்து தமிழில் விஜய் நடிப்பில் வெளியான போக்கிரியை இயக்கினார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. மீண்டும் விஜயின் வில்லு, எங்கேயும் காதல் படத்தை இயக்கினார். பின்னர் பாலிவுட் படங்களை இயக்குவதிலேயே அதிக ஆர்வம் கொண்டார் பிரபு தேவா.
இவர் நடிப்பில் சமீபத்திய படமான போன் மாணிக்கவேலில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் தற்போது இவர் நடிப்பில் யுங் மங் சங், பகீரா, ஊமை விழிகள், முசாசி, ஃப்ளாஷ் பேக், மை டியர் பூதம், பொய்க்கால் குதிரை, ரெக்லா உருவாகி வருகிறது. இதில் மை டியர் பூதத்திற்காக சிகை அலங்காரத்தை மாற்றும் வீடியோவை பிரபு தேவா சமூக வலைதளப்பக்கம் பகிர்ந்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...விக்ரம் டீமுக்கு..தனித்தனியாக வாழ்த்து சொன்ன தெலுங்கு சூப்பர் ஸ்டார்!