MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரஜினி அப்படி பண்ணது உண்மை ; பட் பொண்ணு அவர் கொடுக்கல - தனுஷ் ஓபன் டாக்!

ரஜினி அப்படி பண்ணது உண்மை ; பட் பொண்ணு அவர் கொடுக்கல - தனுஷ் ஓபன் டாக்!

தனுஷ் கொடுத்த பழைய பேட்டி ஒன்றில், தன்னுடைய படத்திற்காக அவர் பாராட்டியது உண்மை தான் ஆனால் பொண்ணு அவர் கொடுக்கவில்லை என பேசியுள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Jan 27 2025, 11:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Dhanush And Selva Raghavan

Dhanush And Selva Raghavan

தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர்களில் ஒருவராக தனுஷ் வளர்த்திருப்பதற்கு  அவருடைய அண்ணன் செல்வராகவன் ஒரு முக்கிய காரணம். தனுஷின் முதல் படமான 'துள்ளுவதோ இளமை' படத்தை இயக்கியது அவருடைய அப்பா கஸ்தூரி ராஜா என்றாலும், இந்த படத்தில் துணை இயக்குனராக பணியாற்றி, நடிக்கவே தெரியாத தனுஷை நடிக்க வைத்த பெருமை செல்வராகவனை தான் சேரும்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Dhanush And Aishwarya Rajinikanth Love

Dhanush And Aishwarya Rajinikanth Love

முதல் படத்திற்காக பல விமர்சனங்களை தனுஷ் எதிர்கொண்டாலும், இதை தொடர்ந்து தனுஷை வைத்து செல்வராகவன் இயக்கிய 2ஆவது படமான 'காதல் கொண்டேன்' இளம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.  இந்தப் படத்தை பார்த்த பிறகு ரஜினிகாந்த், தனுஷை அழைத்து மனதார பாராட்டினார். அப்போது தான் தனுஷிற்கும் ஐஸ்வர்யாவிற்கும் இடையே நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த நட்பு காதலாக மாறியது. இதை தொடர்ந்தே இருவரின் பெற்றோரும் கலந்து பேசி இவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும், திரையுலகமே மெச்சும் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த நிலையில், திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பின்னர் இருவரும் கடந்த ஆண்டு விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர்.

கல்யாணம் ஆகி ஒரு வருஷம் தான் ஆச்சு; அதற்குள் 2-வது திருமணம் செய்த லப்பர் பந்து நடிகை
 

36
Actor Dhanush Salary

Actor Dhanush Salary

தற்போது தமிழ் சினிமாவில் 50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் உச்ச நட்சத்திரமாக உள்ள தனுஷ், தேசிய விருது பிரபலமாகவும் அறியப்படுகிறார். தமிழ் திரையுலகை தாண்டி இவருக்கு பாலிவுட் திரையுலகிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதே போல், தெலுங்கு திரையுலகிலும் தனுஷுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. 

46
Dhanush Upcoming Movies

Dhanush Upcoming Movies

தற்போது தனுஷ் நடிப்பில் 'இட்லி கடை' மற்றும் 'குபேரா' ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இந்த நிலையில் தான், தனுஷ் தன்னுடைய பழைய பேட்டியில் மனைவி ஐஸ்வர்யா பற்றி பகிர்ந்து கொண்ட ஒரு கருத்து கவனம் பெற்றுள்ளது. தொகுப்பாளர், 'காதல் கொண்டேன்' படத்திற்காக ரஜினிகாந்த் உங்களை அழைத்து பாராட்டி விட்டு பொண்ணையும் கொடுத்தாரா? என காமெடியாக கேட்டதற்கு... தனுஷ் "ஆமாம் தலைவர் என்னை அழைத்து பாராட்டியது உண்மை தான்". ஆனால் பொண்ணு அவர் கொடுக்கல அதுவாவே விழுந்துவிட்டது என கூறியுள்ளார். 

பவதாரிணியின் நினைவு நாள் - இளையராஜா வேதனை பதிவு!
 

56
Aishwarya Rajinikanth Direct Dhanush Movie

Aishwarya Rajinikanth Direct Dhanush Movie

தனுஷை திருமணம் செய்து கொண்ட பின்னர், ஐஸ்வர்யா கணவனவரையே வைத்து '3' படத்தை இயக்கினார். இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்ட பட்டாலும், வசூலில் வெற்றிபெறவில்லை. ஆனால் பல வருடங்கள் கழித்து, தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி கண்டது. தனுஷுக்கு தெலுங்கில் அதிக ரசிகர்கள் உருவாவதற்கு இந்த படமும் ஒரு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா கடைசியாக 'லால் சலாம்' படத்தை இயக்கி இருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம், படு தோல்வியை சந்தித்தது.

66
Dhanush About Love Secret

Dhanush About Love Secret

மேலும் தனுஷும், விவாகரத்துக்கு பின்னர் படங்கள் இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் ஏற்கனவே இயக்கிய பா.பாண்டி படம் வெற்றி பெற்ற நிலையில், தன்னுடைய 50-ஆவது படத்தையும் அவரே இயக்கி நடித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது தன்னுடைய சகோதரி மகன் ஹீரோவாக நடித்துள்ள 'நிலவுக்கு என் மேல்' என்னடி கோவம் என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். அதே போல் இட்லி கடை என்கிற படத்தையும் இயக்கி நடித்து வருகிறார். தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து பெற்று பிரிந்தாலும் அவர்களை பற்றிய தகவல்கள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வட்டமிடுகிறது. அந்த வகையில் தான் தனுஷ் தன்னுடைய முன்னாள் மனைவி ஐஸ்வர்யா உடனான காதல் பற்றி பேசியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.

ஊர்வசி படைத்த சாதனை; இதுவரை எந்த நடிகைக்கும் கிடைத்திடாத பெருமை!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved