கல்யாணம் ஆகி ஒரு வருஷம் தான் ஆச்சு; அதற்குள் 2-வது திருமணம் செய்த லப்பர் பந்து நடிகை
விஜய் டிவி சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்ட லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகா, தற்போது இரண்டாவது முறை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
கல்யாணம் ஆகி ஒரு வருஷம் தான் ஆச்சு; அதற்குள் 2-வது திருமணம் செய்த லப்பர் பந்து நடிகை
தமிழில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான வைகை படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஸ்வாசிகா. இதையடுத்து ராசு மதுரவன் இயக்கிய கோரிப்பாளையம் படத்தில் நடித்த இவருக்கு தமிழில் பெரியளவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் மலையாள திரையுலகில் செட்டில் ஆனார். அங்கு மோகன்லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பாப்புலர் ஆனார்.
swasika, Prem Jacob
கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த அப்புச்சி கிராமம் படத்துக்கு பின்னர் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்த ஸ்வாசிகா, கடந்த ஆண்டு வெளிவந்த லப்பர் பந்து படம் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார். தமிழரசன் பச்சைமுத்து இயக்கிய இப்படத்தில் நடிகர் தினேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஸ்வாசிகா.
swasika, Prem Jacob Love
இதில் ஹீரோ - ஹீரோயினை விட, கெத்து தினேஷ் - ஸ்வாசிகா ஜோடியின் ரொமான்ஸ் தான் வேறலெவலில் ஒர்க் அவுட் ஆகி இருந்தது. தற்போது ஸ்வாசிகாவுக்கு வயது 33 தான் ஆகிறது. ஹீரோயினாக நடிக்கும் வயதில், ஹீரோயினுக்கு அம்மா வேடத்தில் நடித்து அப்ளாஸ் வாங்கி இருந்தார் ஸ்வாசிகா. அவரது நடிப்புக்கு பாராடுக்கள் குவிந்தன.
இதையும் படியுங்கள்... மாமன் படத்தில் சூரிக்கு தங்கை – ஒரே ஒரு படத்தால சினிமா வாய்ப்பை தட்டி தூக்கிய லப்பர் பந்து நடிகை!
swasika Husband Prem Jacob
லப்பர் பந்து படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகை ஸ்வாசிகாவுக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது சூரி நடிப்பில் உருவாகும் மாமன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர், அடுத்தபடியாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்திலும் முக்கிய வேடத்தில நடிக்கிறார்.
swasika, Prem Jacob wedding
நடிகை ஸ்வாசிகா சினிமா மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார். மலையாளத்தில் சின்னத்திரை சீரியல்களில் நடித்தபோது அவர் தன்னுடன் நடித்த பிரேம் ஜேக்கப் என்பவரை காதலிக்க தொடங்கினார். இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
swasika, Prem Jacob 2nd wedding
பிரேம் ஜேக்கப் விஜய் டிவியில் ஒளிபரப்பான மோதலும் காதலும் என்கிற சீரியலில் நாயகனாக நடித்தவர், அவரை தான் காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஸ்வாசிகா. இந்த ஜோடிக்கு திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்ததை வித்தியாசமாக கொண்டாடி இருக்கிறார்கள்.
swasika, Prem Jacob Tamil Wedding
இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றிருந்தது. ஆனால் அவர்களுக்கு தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். அதன் காரணமாக இந்த ஆண்டு தங்கள் முதல் திருமண நாளன்று தமிழ் முறைப்படி இருவரும் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Swasika : ஆசை கணவருடன் இன்ப சுற்றுலா.. அந்தமான் கடலில் லூட்டியடிக்கும் நடிகை சுவாசிகா - வைரல் போட்டோஸ்!