MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஊர்வசி படைத்த சாதனை; இதுவரை எந்த நடிகைக்கும் கிடைத்திடாத பெருமை!

ஊர்வசி படைத்த சாதனை; இதுவரை எந்த நடிகைக்கும் கிடைத்திடாத பெருமை!

எந்த நடிகையும் இதுவரை செய்திடாத சாதனையை படைத்துள்ளார் நடிகை ஊர்வசி. பலரும் அறிந்திடாத தகவல் இதோ.  

2 Min read
Author : manimegalai a
Published : Jan 25 2025, 04:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Actress Urvashi Start Carrier in Child Artist

Actress Urvashi Start Carrier in Child Artist

தென்னிந்திய மொழிகளில் சுமார் 700 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஊர்வசி. கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பிறந்த, நடிகை ஊர்வசியின் நிஜ பெயர் கவிதா ரஞ்சனி. சினிமாவுக்கு வந்த பின்னர், ஊர்வசி என மாற்றிக்கொண்டார். 1979 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'கதிர் மண்டபம்' என்கிற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஊர்வசி அறிமுகமானார். அடுத்தடுத்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த போது, தமிழில் ஹீரோயினாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Busy Heroine in 90's

Busy Heroine in 90's

அந்த வகையில் பாக்யராஜ் இயக்கி நடித்து, 1984-ஆம் ஆண்டு வெளியான 'முந்தானை முடிச்சு' படத்தில் பரிமளம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் தான் பாக்யராஜுக்கு, முருங்கைக்காய் நாயகன் என பெயர் வாங்கி கொடுத்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர்,  அபூர்வ சகோதரிகள், தாவணி கனவுகள், கொம்பேறி மூக்கன், நெருப்புக்குள் ஈரம், என அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்தார். 1984 ஆம் ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் 15 படங்கள் ரிலீஸ் ஆனது.

3 லட்சம் வாடகை பாக்கி; வீட்டை லாட்ஜாக மாற்றி விட்டதாக கஞ்சா கருப்பு மீது போலீசில் புகார்!
 

34
Urvashi Divorce and Second Marriage

Urvashi Divorce and Second Marriage

பின்னர் மலையாள திரையுலகிலும் ஊர்வசி கவனம் செலுத்த தொடங்கியதால், தமிழில் குறைந்த படங்களில் மட்டுமே நடித்தார். தமிழ், மலையாளத்தை தவிர கன்னடம், ஹிந்தி, போன்ற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகையாக இருக்கும் போதே, மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் 8 வருடத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். முதல் கணவர் மனோஜ் மூலம் இவருக்கு ஒரு மகள் பிறந்த நிலையில், 2013 ஆம் ஆண்டு சிவப்பிரசாத் என்கிற தொழிலதிபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் மகன் ஒருவரையும் பெற்றெடுத்தார் ஊர்வசி.
 

44
Urvashi Got 6 National Award

Urvashi Got 6 National Award

இன்று தன்னுடைய 56-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் ஊர்வசியின் சாதனை  பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம் இதுவரை தேசிய விருது உட்பட பல மாநில அரசின் விருதுகளை பெற்றுள்ளனர் தான் ஊர்வசி. குறிப்பாக, கேரள மாநில அரசின் விருதை 6 முறை வாங்கி சாதனை செய்துள்ளார். இதுவரை எந்த ஒரு நடியையும் 6 முறை கேரள அரசின் விருதை பெற்றது இல்லை. அதே போல் 1989 முதல் 1991 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக மூன்று கேரள மாநில அரசு விருதுகளைவென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

60 ரூபாயுடன் விவாகரத்து பெற்று வெளியேறிய சரிகா! செட்டில்மென்ட் கொடுக்காதது ஏன்? கமல் சொன்ன காரணம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved