- Home
- Cinema
- Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Rewatchable Movies in Tamil : தமிழ் சினிமாவில் ரிலீஸ் ஆன படங்களில் எத்தனை தடவ பார்த்தாலும் சலிக்காத படங்கள் சில இருக்கின்றன. அதனைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Top 5 Rewatchable Tamil Movies
சினிமா என்பது மனிதர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. செல்போன் இல்லாத காலகட்டத்தில் டிவியில் போடும் படங்களை தான் மக்கள் விரும்பி பார்த்தார்கள். ஆனால் ஓடிடி தளங்களின் அசுர வளர்ச்சியால், இன்று பல்வேறு மொழிகளில் உள்ள படங்களையும் பார்க்க முடிகிறது. அதிலும் ஒரு சில படங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. அப்படி தமிழ் சினிமாவில் வெளியாகி அதிக ரீ வாட்ச் வேல்யூ கொண்ட படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாட்ஷா
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1995-ம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் பாட்ஷா. இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். கேங்ஸ்டர் படத்திற்கான அக்மார்ம் எடுத்துக்காட்டு இந்தப் படம் தான். இதில் ரஜினி, ஆனந்த்ராஜை கரண்ட் கம்பத்தில் அடிக்கும் சீன், தன் தங்கைக்கு வேலை கேட்டு சென்றபோது அந்த ஓனரிடம் தன்னுடைய கடந்த கால கேங்ஸ்டர் வாழ்க்கையை பற்றி சொன்னதும் அவர் மிரளும் காட்சி போன்றவை இன்று பார்த்தாலும் கூஸ்பம்ஸ் வர வைக்கும் அந்த அளவுக்கு ரீ வாட்ச் வேல்யூ உள்ள படமாக அது இருக்கிறது.
சூர்யவம்சம்
விக்ரமன் இயக்கத்தில் 1997ம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் சூர்யவம்சம். சரத்குமார், தேவையானி, ராதிகா நடித்த இப்படம் அந்த காலகட்டத்தில் அதிக மக்கள் தியேட்டரில் பார்த்து ரசித்த படம் என்கிற பெருமையை பெற்றிருந்தது. அந்த சாதனையை இன்றுவரை எந்த படமும் முறியடிக்கவில்லை. படத்தில் சரத்குமார் தன் சொந்த உழைப்பால் முன்னேறுவதை பார்க்கும்போது நமக்கே உத்வேகம் அளிக்கும். அந்த அளவுக்கு இப்படத்தில் காமெடி, எமோஷனல், ஃபேமிலி டிராமா என அனைத்தும் நிரம்பி இருக்கும். இப்படத்தையும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.
கில்லி
நடிகர் விஜய்யின் கெரியரில் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த படம் என்றால் அது கில்லி தான். 2004-ம் ஆண்டு தரணி இயக்கத்தில் ரிலீஸ் ஆன இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். குறிப்பாக பிரகாஷ் ராஜ் நடித்த வில்லன் கதாபாத்திரம் செம ஹைலைட்டாக அமைந்தது. அவர் ஹாய் செல்லம் என அப்படத்தில் சொன்னது மிகவும் ஹிட்டாகி அவருக்கு ஒரு டிரேடு மார்க் டயலாக்காக அது மாறிவிட்டது. இப்படத்தின் மிகப்பெரிய பிளஸ் அதன் திரைக்கதை தான். முதல் காட்சியில் இருந்து கிளைமாக்ஸ் வரை விறுவிறுவென கொண்டு சென்று அசத்தி இருப்பார் தரணி. அதனால் இப்படம் எத்தனை முறை பார்த்தாலும் போர் அடிக்காது.
அயன்
சூர்யா நடிப்பில் வெளியாகி அதிரிபுதிரி ஹிட் அடித்த படம் அயன். இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி இருந்தார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். வைரம், போதைப் பொருள் கடத்தல் எப்படி நடக்கிறது என்பதை தோலுரித்து காட்டிய படம் இது. இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளும் ஹாலிவுட் தரத்தில் இருக்கும். அதேபோல் ஹாரிஸ் ஜெயராஜின் மாஸ்டர் பீஸ் பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். இப்படத்தின் திரைக்கதை ஜெட் வேகத்தில் இருக்கும். அதனால் நேரம் போவதே தெரியாது.
மாயாண்டி குடும்பத்தார்
இராசு மதுரவன் இயக்கத்தில் சீமான், தருண் கோபி, மணிவண்ணன் உள்பட ஏராளமான இயக்குனர்கள் இணைந்து நடித்த படம் தான் மாயாண்டி குடும்பத்தார். குடும்பத்தோடு பார்த்த ரசிக்கக்கூடிய வகையில் இப்படத்தை எடுத்திருப்பார் இராசு மதுரவன். இப்படத்தில் காதல், எமோஷன், காமெடி என அனைத்தும் கலந்திருக்கும். குறிப்பாக சிங்கம் புலியின் காமெடி இன்றும் ரசிக்கும்படி அமைந்திருக்கும். அப்படத்தின் எமோஷனல் காட்சிகள் கண்களை குளமாக்கும், வகையில் அமைந்திருக்கும். அப்படத்தையும் ரிப்பீட் மோடில் பார்த்தாலும் சலிக்காது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.





