- Home
- Cinema
- Tamil Cinema : தமிழ் சினிமாவிற்கு பொற்காலமாக மாறிய 2026... பேக் டூ பேக் ஹிட் படங்களால் மாஸ் காட்டும் கோலிவுட்..!
Tamil Cinema : தமிழ் சினிமாவிற்கு பொற்காலமாக மாறிய 2026... பேக் டூ பேக் ஹிட் படங்களால் மாஸ் காட்டும் கோலிவுட்..!
Kollywood Hit Movies : தொடர்ச்சியாக ஹிட் படங்கள் வருவதால் தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு பொற்காலமாக மாறி உள்ளது. அதைப்பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்.

Tamil Hit Movies 2026
தமிழ் சினிமாவில் 2026-ம் ஆண்டு துவக்கத்தில் இருந்தே, பெரியளவில் ஹிட் படங்கள் எதுவும் அமையாமல் இருந்தது. பொங்கலுக்கு ரிலீஸ் ஆன பராசக்தி, பெரிய எதிர்பார்ப்போட ரிலீஸ் ஆனாலும் அதற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து பெரிய படங்கள் எதுவுமே ரிலீஸ் ஆகவில்லை. சின்ன பட்ஜெட் படங்களும் கவனம் ஈர்க்கும் வகையில் அமையாமல் தான் இருந்தது. கென் கருணாஸ் இயக்கி, நடித்த யூத் படம், சூரியாவின் கருப்பு, அர்ஜுனின் பிளாஸ்ட், ராதிகா நடித்த தாய் கிழவி போன்ற சில படங்கள் தான் இந்த ஆண்டின் முதல் பாதியில் வெற்றியடைந்தது.
சூர்யாவுக்கு டபுள் டமாக்கா
2026-ம் ஆண்டின் இரண்டாவது பாதியாவது தமிழ் சினிமாவை சரிவில் இருந்து மீட்குமா என காத்திருக்கும் போது தான், கட்டா குஸ்தி 2 திரைப்படம் ரிலீஸ் ஆச்சு. படமும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதைத்தொடர்ந்து அதர்வாவின் இதயம் முரளி, லோகேஷ் கனகராஜின் டிசி போன்ற திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியது. பின்னர் ஒவ்வொரு வாரமும் ஒரு ஹிட் படமாக வரத் தொடங்கியதால், தமிழ் சினிமா மீண்டும் புத்துயிர் பெற்றிருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ஏற்கனவே கருப்பு படம் மூலமா பிரம்மாண்ட வெற்றியை ருசித்த சூர்யாவுக்கு டபுள் டமாக்காவாக அமைந்த படம் தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ரிலீஸ் ஆன இந்த படம், குடும்ப உறவுகள், காதல் மையமாக கொண்ட படமாக அமைந்தது.
சம்பவம் பண்ணிய மொத ராத்திரி
அதற்கு அடுத்த வாரமே ரிலீஸ் ஆனது தான் மொத ராத்திரி. பெரிய நட்சத்திர பட்டாளமோ, பெரிய இயக்குநரோ எதுவுமே இல்லாமல் சைலண்டாக ரிலீஸ் ஆன இப்படம் பட்டிதொட்டியெங்கும் சம்பவம் பண்ணி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. ஆரம்பத்தில் படத்துக்கு பெரியளவில் ஓப்பனிங் எதுவும் கிடைக்கவில்லை. ஆனா போகப் போக படம் பிக் அப் ஆகி தியேட்டரில் ஹவுஸ்ஃபுல் ஆகத் தொடங்கியது. படம் ஓடிடியில் வெளியான பின்னரும், தியேட்டரில் சக்கைப்போடு போட்டு வருகிறது.
அதிரி புதிரி ஹிட் அடித்த சூரியின் மண்டாடி
மறுபக்கம் நடிகர் சூரி, ஹீரோவான பின்னர் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்து வருகிறார். அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன மண்டாடி திரைப்படம் உள்ளூர் படகுப் போட்டியையும், மீனவ மக்களின் வாழ்க்கையையும் பிரதிபலித்து சுவாரஸ்யமான திரை அனுபவத்தை கொடுத்தது. சூரியின் கெரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த மண்டாடி, பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்ததாக படக்குழுவே அறிவித்திருந்தது. இப்படம் தற்போது ஓடிடியிலும் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
பேக் டூ பேக் ஹிட் கொடுத்த கோலிவுட்
இந்த ஹிட் லிஸ்ட்டில் தன்னுடைய பங்காக கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த படம் தான் டோரதி. 1990களில் கிராமப்புறப் பின்னணியில் உருவான இப்படத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை பேசி இருந்தார் இயக்குநர். விமர்சன ரீதியாக ஆஹா... ஓஹோனு கொண்டாடப்பட்டு வரும் இப்படம் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்துக்கு போட்டியாக பெரிய எதிர்பார்ப்போடு ரிலீஸ் ஆன படம் தான் ஹிப்ஹாப் தமிழா நடித்த மீசைய முறுக்கு 2. 3 தலைமுறையோட இசைப்பயணத்தை மையமாக கொண்டு நகரும் இந்த படம், மிகப்பெரிய அளவிலான ஹிட் பாடல்களோடு ஒரு கொண்டாட்டமான படமாக தான் ரசிகர்களுக்கு அமைந்தது.
தமிழ் சினிமாவிற்கு பொற்காலம்
இந்த பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்த படம் தான் பத்தா. பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த இப்படம் 1980களில் சென்னையில் வாழும் ஒரு ரெளடிக்கும், சிறுவனுக்கும் இடையில் உருவாகுற ஒரு எதிர்பாராத உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளதோடு, வசூலிலும் தூள் கிளப்பி வருகிறது. தமிழ் சினிமாவுக்கு அமைந்துள்ள இந்த பேக் டூ பேக் ஹிட் படங்கள் எல்லாம் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த 2026 தமிழ் சினிமாவிற்கு ஒரு பொற்காலம் என்று சொல்லும் அளவுக்கு தொடர்ச்சியாக ஹிட் படங்கள் வருகின்றன. அடுத்ததாக ரஜினியின் ஜெயிலர் 2, சூர்யா நடித்த சீன், தனுஷின் ஓம் என முன்னணி நடிகர்களின் படங்கள் க்யூவில் நிற்பதால், இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மேலும் சில வெற்றிப்படங்கள் வர வாய்ப்பு உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

