MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Yuvan : யுவனின் OG சம்பவம்... பருத்திவீரன் முதல் பில்லா வரை 2007-ல் யுவன் தொட்டதெல்லாம் ஹிட்

Yuvan : யுவனின் OG சம்பவம்... பருத்திவீரன் முதல் பில்லா வரை 2007-ல் யுவன் தொட்டதெல்லாம் ஹிட்

Yuvan Shankar Raja : இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, கடந்த 2007-ம் ஆண்டு மட்டும் 8 படங்களுக்கு இசையமைத்திருந்தார். அந்த 8 படங்களின் பாடல்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன.

3 Min read
Author : Ganesh A
Published : Sep 30 2026, 09:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Yuvan Supremacy in 2007
Image Credit : instagram

Yuvan Supremacy in 2007

இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் ஹிட் கொடுத்தாலே அப்படத்தின் இசையமைப்பாளரை ஆஹா... ஓஹோனு தலையில் தூக்கி வச்சு கொண்டாடுகிறார்கள். ஆனால் கடந்த 2007-ம் ஆண்டு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒரு தரமான சம்பவம் செய்திருக்கிறார். அந்த ஆண்டு அவர் இசையில் வெளியான அத்தனை படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட். அப்படத்தின் பாடல்களும் காலம் கடந்து இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அது எந்தெந்த படங்கள் என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Vaali : யுவன் கொடுத்த சவாலான டியூன்... இது எனக்கு ஜுஜுபி மாதிரினு சொல்லி வாலி கொடுத்த சூப்பர் ஹிட் பாட்டு..!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
தாமிரபரணி
Image Credit : X

தாமிரபரணி

2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் யுவன் இசையில் தாமிரபரணி திரைப்படம் ரிலீஸ் ஆனது. ஹரி இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்த அப்படம் எந்த அளவுக்கு அமோக வெற்றி பெற்றதோ, அதே அளவுக்கு அப்படத்தின் பாடல்கள் மற்றும் பிஜிஎம் செம ஹிட் அடித்தன. அதில் இடம்பெற்ற கட்டபொம்மன் ஊர் எனக்கு, தாலியே தேவையில்ல, கருப்பான கையால, வார்த்தை ஒன்னு, திருச்செந்தூரு முருகா என அனைத்து பாடல்களும் அடிபொலி ஹிட் அடித்தன.

39
தீபாவளி
Image Credit : X

தீபாவளி

இதையடுத்து 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயம் ரவி நடித்த தீபாவளி திரைப்படம் ரிலீஸ் ஆனது. அந்த காலகட்டத்தில் இப்படத்தின் பாடல்கள் தான் திரும்பிய பக்கமெல்லாம் ஒலிக்கும். காதல் வைத்து, போகாதே, போன்ற பாடல்கள் காதலர்களின் பிளேலிஸ்டில் தவறாமல் இடம்பெறும் அளவுக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இதுதவிர கண்ணன் வரும் வேளை, டோலு பாஜே போன்ற பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன.

49
பருத்திவீரன்
Image Credit : X

பருத்திவீரன்

தீபாவளி படம் ரிலீஸ் ஆன அதே மாதத்தில் யுவன் கொடுத்த மற்றுமொரு மாஸ்டர் பீஸ் படம் தான் பருத்திவீரன். அமீர் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்த இப்படத்திற்கு அடையாளமாக இருந்ததே யுவன் சங்கர் ராஜாவின் இசை தான். வெஸ்டர் இசை மட்டுமல்ல ஒரு கிராமத்து கதையம்சம் கொண்ட படத்திற்கும் தன்னால் இறங்கி வேலை செய்ய முடியும் என நிரூபித்த படம் தான் பருத்திவீரன். இதில் இடம்பெற்ற ஊரோரம் புளியமரம் பாடல் இன்று கேட்டாலும் கால்கள் தன்னாலேயே ஆடத்தூண்டும்.

59
சென்னை 28
Image Credit : X

சென்னை 28

இதையடுத்து அந்த ஆண்டு யுவன் இசையில் ரிலீஸ் ஆன படம் தான் சென்னை 28. இப்படத்தின் மூலம் தான் யுவனின் அண்ணன் வெங்கட் பிரபு ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தில் நடித்த ஏராளமானோர் புதுமுகங்கள் தான். இப்படத்திற்கு ஒரு ஹீரோவாகவே யுவன் சங்கர் ராஜாவின் இசை இருந்தது. அந்த காலகட்டத்தில் யூத்களின் ஃபேவரைட் ஆல்பமாக இது இருந்தது. சரோஜா சாமானிகாலோ, ஜல்சா போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தன.

69
சத்தம் போடாதே
Image Credit : X

சத்தம் போடாதே

இதுவரை தொடர்ந்து கமர்ஷியல் படங்களுக்காக இசையமைத்து வந்த யுவன், அடுத்ததாக இசையமைத்த த்ரில்லர் படம் தான் சத்தம் போடாதே. பிருத்விராஜ், பத்ம பிரியா நடித்த இப்படத்தை வசந்த் இயக்கி இருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பேசுகிறேன் பேசுகிறேன், அழகு குட்டிச் செல்லம் போன்ற பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. யுவன் இசையில் வந்த ஒரு அண்டர் ரேட்டட் ஆல்பமாக இது அமைந்தது.

79
கற்றது தமிழ்
Image Credit : X

கற்றது தமிழ்

அடுத்ததாக 2007-ம் ஆண்டு யுவன் செய்த சம்பவம் தான் கற்றது தமிழ் திரைப்படம். ராம் இயக்கத்தில் ஜீவா ஹீரோவாக நடித்த இப்படத்திற்கு யுவனின் பாடல்கள் ஹைலைட்டாக அமைந்தன. அதிலும் குறிப்பாக யுவன் இசையில் இளையராஜா பாடிய பறவையே எங்கு இருக்கிறாய் பாடல் காலத்தால் அழியாத பாடலாக மாறிவிட்டது.

89
வேல்
Image Credit : X

வேல்

ஹரி - யுவன் கூட்டணியில் 2007-ன் தொடக்கத்தில் தாமிரபரணி வெளியாகி ஹிட் ஆனதை தொடர்ந்து, அவர்கள் இருவரும் அந்த ஆண்டு இறுதியில் மற்றுமொரு கமர்ஷியல் படத்தை கொடுத்தனர். அதுதான் வேல். சூர்யா இரட்டை வேடத்தில் நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அசின் நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே ஹிட் ஆகின.

99
பில்லா
Image Credit : X

பில்லா

இறுதியாக அந்த ஆண்டின் இறுதியில் யுவன் சங்கர் ராஜா கொடுத்த மாஸ் படம் தான் பில்லா. இப்படத்தில் யுவன் போட்ட பாடல்களுக்கு இணையாக அதன் பிஜிஎம்மும் வைரல் ஹிட் ஆனது. அஜித்தின் ஸ்டைலிஸ் வாக்குக்கு யுவன் போட்ட பின்னணி இசை அன்றைய காலகட்டத்தில் பலரது ரிங் டோனாக இருந்து வந்தது. இப்படி 2007-ம் ஆண்டு யுவனின் பொற்காலம் என்றே சொல்லலாம்.

Dheena & Billa: ரீ-ரிலீஸில் கில்லி பட வசூலில் பாதிகூட கிடைக்கலயா? பாக்ஸ் ஆபிஸில் பரிதாப நிலையில் அஜித் படங்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்ப் பாடல்கள்
யுவன் சங்கர் ராஜா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss : பணப்பெட்டியோடு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்? அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்
Recommended image2
Sivakarthikeyan : பேசியதைவிட டபுள் மடங்கு சம்பளமா? சிவகார்த்திகேயன் குறித்து அதிர வைக்கும் தகவல்
Recommended image3
Bigg Boss : அஸ்மிதாவிடம் அடிதடியில் இறங்கிய சாவின்யா... குமரனுக்கு செம டோஸ் கொடுத்த லட்சுமி பிரியா - சூடுபிடிக்கும் பிக் பாஸ்
Related Stories
Recommended image1
8 வயதில் யுவன் போட்ட ட்யூன்; நைஸாக காப்பியடித்து இளையராஜா போட்ட ஹிட் பாட்டு
Recommended image2
காலை வாரிய யுவன்! பாட்டே இல்லாமல் அஜித் டான்ஸ் ஆடிய சூப்பர் ஹிட் பாடல் எது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved