தனுஷுக்கு ஜோடியாகிறாரா அமலா பால்? எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் வெளியான தகவல்!
தனுஷின் 50-ஆவது படத்தில் அமலாபால் நடிக்க உள்ளதாக, வெளியாகி உள்ள தகவல் தற்போது சமூக வலைதளத்தில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வரும் தனுஷ், தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ள நிலையில், இந்த படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதைத் தொடர்ந்து சேகர் காமுல்லா இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திலும் கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது.
இந்த இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் தனுஷ் நடிக்க முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ள நிலையில், அவரின் 50-ஆவது படத்தை, அவரே இயக்கி நடிக்க உள்ளாராம். அவ்வபோது இந்த படம் குறித்த தகவல்களும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இதுவரை வெளியாகி உள்ள தகவலின் படி, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், தனுஷின் D-50 படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பார் என கூறப்படுகிறது. அதுபோல் இந்த படத்தில் தனுஷை தவிர விஷ்ணு விஷால் மற்றும் சந்தீப் கிஷன் ஆகிய இரண்டு ஹீரோக்கள் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர்.
2000-திற்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் உடல்களை தகனம் செய்த மணிமாறனுக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய ரஜினிகாந்த்!
துஷாரா விஜயன் தனுஷுக்கு தங்கையாகவும், அபர்ணா பாலமுரளி சந்தீப் கிசனுக்கு ஜோடியாகவும் நடிக்க உள்ளதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தில் அமலா பாலும் இணைந்துள்ளதாக, கூறப்படும் தகவல் தான் சமூக வலைத்தளத்தில் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டிருக்கிறது. ஒரு தரப்பினர் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்க உள்ளதாக கூறும் நிலையில், மற்றொரு தரப்பினர் அதற்க்கு வாய்ப்பே இல்லை என இந்த தகவலை மறுத்து வருகிறார்கள்.
ஏற்கனவே தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில், இவர்களுடைய கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, தனுஷின் ஐம்பதாவது படத்திலும் இவர்களின் பேரிங் தொடருமா? என்பது எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஆனால் இதுகுறித்த எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. எனவே இந்த படத்தில் அமலா பால் இணைவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
வடசென்னையை பின்னணியாக வைத்து, கேங்ஸ்டார் கதை அம்சத்தில் டி-50 திரைப்படம் உருவாக உள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது. ஏற்கனவே தனுஷ் - அமலா பால் குறித்த கிசுகிசு கோலிவுட் திரையுலகில் வட்டமிட்டு வரும் நிலையில்... இவர்கள் ஜோடி சேர்ந்தால் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெயை ஊற்றிய கதையாக இருக்கும் என சினிமா விமர்சகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.