2000-திற்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் உடல்களை தகனம் செய்த மணிமாறனுக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய ரஜினிகாந்த்!

2000-திற்கும் மேற்பட்ட, ஆதரவற்றோர் சடலங்களை, உரிய அனுமதியுடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்து வரும், மணிமாறனின் சேவையை பாராட்டி சூப்பர் ஸ்டார் ரஜிகாந்த் ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளார்.
 

Rajinikanth gave an ambulance to Manimaran

திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளத்தை சேர்ந்தவர் 37 வயதாகும் மணிமாறன். இவர் தன்னுடைய 16 வயதில் இருந்து, பலரும் செய்ய முன்வராத சமூக சேவையை செய்து வருகிறார். தெருவில் வாழ்ந்து உயிரிழந்த ஆதரவற்ற முதியவர்கள், மருத்துவமனையில் யாரும் பெற்றுக்கொள்ள முன்வராத பிரேதங்களை போலீசாரின் உரிய அனுமதியோடு பெற்று, அவர்களை நல்லடக்கம் செய்து வருவதை கடந்த 20 வருடங்களுக்கு மேலாக செய்து வருகிறார்.

Rajinikanth gave an ambulance to Manimaran

இதுவரை மணிமாறன் தன்னுடைய சொந்த செலவில், சுமார்  இரண்டாயிரத்திக்கும் மேற்பட்ட சடலங்களை நல்லடக்கம் செய்துள்ளார். இவரது சேவையை பாராட்டும் விதமாக சமீப காலமாக பலர் தங்களால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார்கள். ஆனால் இவர் வழிய சென்று யாரிடமும் எந்த உதவியையும் எதிர்பார்ப்பது இல்லை. மணிமாறனின் இந்த உயரிய செயலை கௌரவிக்கும் விதமாக மத்திய - மாநில அரசுகள் விருதுகள் வழங்கி பாராட்டியுள்ளது.

இந்த படம் ஓடவில்லை என்றால் சினிமாவை விட்டே விலகி விடுவேன் என சவால் விட்ட த்ரிஷா! பயில்வான் கூறிய தகவல்!

குறிப்பாக உலக சாதனையாளர் விருது, கௌரவ டாக்டர் பட்டம், போன்றவை இவரது சாதனையை பாராட்டும் விதத்தில் வழங்கியுள்ளது. அதே போல் கொரோனா காலத்தில் இவரது சேவை பணிகள் ஈடு இணையற்றது. மாநில அரசுடன் இணைந்து பலரது உடலை பயத்தை கடந்து நல்லடக்கம் செய்தார். 

Rajinikanth gave an ambulance to Manimaran

சம்பளத்தை குறைத்த ரஜினிகாந்த்! லால் சலாம் மற்றும் 170-வது படத்திற்கு சேர்த்து எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா?

இந்நிலையில்  இவரின் சேவைக்கு உதவும் வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த செயலுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களையும் , பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios