இந்த படம் ஓடவில்லை என்றால் சினிமாவை விட்டே விலகி விடுவேன் என சவால் விட்ட த்ரிஷா! பயில்வான் கூறிய தகவல்!
நடிகை த்ரிஷா கதாநாயகியாக அறிமுகமான காலகட்டத்தில், செய்தியாளர் எழுப்பிய கேள்வியால்... இந்த படம் ஓடவில்லை என்றால், திரையுலகை விட்டு விலகுகிறேன் என த்ரிஷா கூறியதாக பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் யூடியூப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகை த்ரிஷா சிம்ரன் - பிரசாந்த் நடிப்பில் வெளியான, 'ஜோடி' படத்தில் சிம்ரனுக்கு தோழியாக இரண்டே காட்சிகளில் வந்து செல்லும் கதாபாத்திரத்தில் நடித்தவர். இதன் பின்னர் கதாநாயகியாக 'மௌனம் பேசியதே' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தின் கதைக்களம் வித்யாசமானது என்றாலும் கூட, எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதைத்தொடர்ந்து 'மனசெல்லாம்' படத்தில் நடிகை த்ரிஷா நடித்தார். இந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் தோல்வியை சந்தித்தது.
அடுத்தடுத்து இரண்டு தோல்வி படங்களை கொடுத்ததால், ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டார். அந்த சமயத்தில் தான் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக, 'சாமி' படத்தில் நடிக்க கமிட் ஆனார். த்ரிஷாஅடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்து வரும் நிலையில், ஏன் அவரை இப்படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என சிலர் நேரடியாகவே ஹரியிடம் கூறியதற்கு, த்ரிஷா பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த படத்திற்கு பொருத்தமாக இருப்பார் என கூறியுள்ளார்.
மேலும் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது த்ரிஷாவிடம் செய்தியாளர் ஒருவர் அடுத்தடுத்து தோல்வி படங்களில் நடித்து வருகிறீர்களே? இப்படம் வெற்றி பெறுமா என்பது போல் கேள்வி எழுப்பிய நிலையில், த்ரிஷா ஆவேசமாக இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும். ஒரு வேளை ஓடவில்லை என்றால் திரை உலகில் இருந்தே விலகி விடுவேன் என த்ரிஷா கூறியதாகவும், தெரிவித்துள்ளார். எனவே இப்படம் ஓடவில்லை என்றால் த்ரிஷா சினிமாவை விட்டு விலகி இருப்பார் என்று, இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு தகவலை பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த த்ரிஷா, தெலுங்கிலும் பல இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த படங்கள் வெற்றி பெற்றது. பின்னர் பிரபல தெலுங்கு வாரிசு நடிகர் ஒருவரின் காதல் வலையில் சிக்கிய த்ரிஷா, அவருடன் டேட்டிங் செய்த நிலையில்... இருவரும் திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு சென்று, இந்த திருமணம் நின்று போனது. பின்னர் தொழிலதிபர் ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து த்ரிஷாவின் திருமணம் நின்றது. இப்படி தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் பல்வேறு சோதனைகளை த்ரிஷா சந்தித்துள்ளார்.
த்ரிஷா வயது அதிகரித்ததன் காரணமாக, இடையில் இரண்டு வருடங்கள் பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது 96 திரைப்படம் தான். இந்த படத்தில் ஒரு சீனியர் நடிகையாக இருந்தாலும் கூட விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து மீண்டும் தன்னுடைய வெற்றியை உறுதி செய்தார். இப்படி பல்வேறு போராட்டங்களையும் கடந்து சுமார் 22 வருடங்களாக கதாநாயகியாக மட்டுமே நிலைத்து நிற்கும் த்ரிஷாவன் தன்னம்பிக்கையை புகழ்ந்து தள்ளியுள்ளார் பயில்வான் ரங்கநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.