மாடர்ன் குந்தவையாக மாறிய சிவாங்கி... ‘உயிர் உங்களுடையது தேவி’ என உருகும் ரசிகர்கள்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக் ஆக மாறி கலக்கிக் கொண்டிருக்கும் சிவாங்கியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பாடகியாக அறிமுகமானவர் சிவாங்கி. அந்நிகழ்ச்சியில் வெற்றியடையாவிட்டாலும், இவரின் திறமைக்கு சினிமாவில் பாடும் வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்தன. இதனைப்பயன்படுத்தி சினிமாவில் இளம் இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி வந்த சிவாங்கிக்கு, திடீரென கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்களில் கோமாளியாக வந்து கலக்கினார் சிவாங்கி.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் சிவாங்கிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. இந்நிகழ்ச்சியின் 2-வது சீசனில் சிறப்பு விருந்தினராக வந்த சிவகார்த்திகேயன், சிவாங்கி உடன் பணியாற்ற ஆசைப்படுவதாக கூறி சென்றதோடு, தனது நடிப்பில் வெளியான டான் படத்தின் மூலம் சிவாங்கியை நடிகையாகவும் அறிமுகப்படுத்தினார். அப்படத்தில் பிரியங்கா மோகனுக்கு தோழியாக நடித்திருந்தார் சிவாங்கி. அவரின் காமெடி காட்சிகளும் அப்படத்தில் பெரியளவில் ஹிட் அடித்தது.
இதையும் படியுங்கள்... அரும்பு மீசை... ஹீரோ லுக்கில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா! அப்பாவுக்கே டஃப் கொடுக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்!
டான் படத்தை தொடர்ந்து வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், கண்ணன் இயக்கிய காசேதான் கடவுளடா போன்ற படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து அசத்தினார் சிவாங்கி. இதையடுத்து யாரும் எதிர்பார்க்காத விதமாக தற்போது நடைபெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக் ஆக களமிறங்கினார் சிவாங்கி. அவர் குக் ஆக களமிறங்கிய முதல் சீசனிலேயே அசத்தலாக சமைத்து, முதல் ஆளாக பைனலுக்குள்ளும் நுழைந்துள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வார வாரம் விதவிதமான உடை அணிந்து வருவதை வழக்கமாக வைத்துள்ள சிவாங்கி, கடந்த வாரம் சேலையும், மாடர்ன் டிரெஸ்ஸும் கலந்த கலவையாக வித்தியாசமான உடை ஒன்றை அணிந்து வந்திருந்தார். தற்போது அந்த உடையணிந்து நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சிவாங்கி. இதைப்பார்த்த ரசிகர்கள் அவர் மாடர்ன் குந்தவை போல இருப்பதாக புகழ்ந்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... மாடலிங் துறையின் கருப்பு பக்கத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ‘இராக்கதன்’!