மாடலிங் துறையின் கருப்பு பக்கத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ‘இராக்கதன்’!

இதுவரை சொல்லப்படாத கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘இராக்கதன்’ திரைப்படம் மாடலிங் துறையில் நடக்கும் சில சம்பவங்களை அடிப்படியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.
 

Raakadhan brings to light the dark side of the modeling industry

மருதம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் MAG பாஸ்கர் மற்றும் ராணி ஹென்றி சாகுவேல் தயாரிப்பில், தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இராக்கதன்’. ஆர்.தண்டாயுதபாணி கிரியேடிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள இப்படம் மாடலிங் துறையின் கருப்பு பக்கத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையில் தயாராகியுள்ளது.

வம்சி கிருஷ்ணா, ரியாஸ்க் ஆன், நிழல்கள் ரவி, காயத்ரி ரீமே போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன், விக்னேஷ் பாஸ்கர், தினேஷ் கலைச்செல்வன் ஆகியோர் நாயர்களாக அறிமுகமாகிறார்கள்.

Raakadhan brings to light the dark side of the modeling industry

'மக்கள் நீதி மய்யம் ' கட்சிக்கு வலு சேர்க்கும் பிரபலங்கள்! அதிரடியாக கட்சியில் இணைந்த பிரபல நடிகை!

தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதைக்களத்தை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன், மாடலிங் துறையின் கருப்பு பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையில் இப்படத்தின் திரைக்கதையை எழுதியிருப்பதோடு, தற்போதைய காலக்கட்டத்தில் பெண்களின் துன்பங்களை மட்டுமே படமாக்கி வரும் தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு ஆண் தனது குடும்பத்திற்காகவும், தனது கனவிற்காகவும் எதிர்கொள்ளும் துன்பங்களை பற்றி பேசும் பொழுதுபோக்கு திரைப்படமாக இயக்கியிருக்கிறார்.

மனாஸ் பாபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஏ.பிரவீன் குமார் இசையமைத்துள்ளார். பாபு கிறிஸ்டியன், இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் பாடல்கள் எழுத, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்துள்ளார். இன்ப பிரகாஷ் கலை இயக்குநராக பணியாற்ற, சரவெடி சரவணன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

Raakadhan brings to light the dark side of the modeling industry

ஜூன் 7 ஆம் தேதி ’இராக்கதன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துக்கொண்டார்கள். நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட பாடல்கள் மற்றும் படத்தின் டிரைலர் விருந்தினர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், நிகழ்ச்சியில் பேசிய திரை பிரபலங்கள், தமிழ் சினிமாவில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ள ‘இராக்கதன்’ திரைப்படம் நிச்சயம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும். படத்தின் பாடல்களும், டிரைலரும் படத்தை பார்க்க கூடிய ஆவலை தூண்டுகிறது, என்று கூறி வாழ்த்தினார்கள்.

விரைவில் இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகும் கணேஷ் வெங்கட்ராம்! கர்ப்பமாக இருக்கும் நிஷாவின் புகைப்படம் வைரல்!

பாடல்கள் மற்றும் டிரைலருக்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகமடைத்திருக்கும் படக்குழு ‘இராக்கதன்’ படத்தை ஜூலை மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். விரைவில் ரிலீஸ் தேதியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios