அட கடவுளே... முதல் நாளே 'கோப்ரா' பட குழுவிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி..! இதை எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!
நடிகர் விக்ரம் நடிப்பில், நீண்ட காத்திருப்புக்கு பின்னர் வெளியாகியுள்ள 'கோப்ரா' படம் வெளியான முதல் நாளே, படக்குழுவிற்கு பேரதிர்ச்சியாக தகவல் கிடைத்துள்ளது.
டிமான்டி காலனி, மற்றும் இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் 'கோப்ரா'. இந்த படத்திற்காக சுமார் மூன்று வருடங்கள் கடுமையாக உழைத்துள்ளனர் படக்குழுவினர்.
cobra
நடிகர் விக்ரம் சுமார் 7 வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தின், ப்ரமோஷன் பணிகளில் நடிகர் விக்ரமே நேரடியாக பல்வேறு ஊர்களுக்கு சென்று ப்ரமோட் செய்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படத்தில், விக்ரமின் நடிப்பு தொடர்ந்து, பாராட்டுகளை பெற்று வருகிறது.
மேலும் செய்திகள்: குழந்தை பெற்ற பிறகு... மீண்டும் தமிழில் முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகும் எமி ஜாக்சன்!
இப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 800-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இன்று அதிகாலை 5 மணிக்கு கோப்ரா படத்தின் FDFS திரையிடப்பட்டது. இப்படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து நடிகர் விக்ரம் மற்றும் கோப்ரா படக்குழுவினர் கண்டுகளித்தனர்.
விக்ரம் இந்த படத்திற்காக தொடர்ந்து பலரிடம் இருந்து பாராட்டுகளை பெற்றிருந்தாலும், படத்தின் கதையில் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பு அம்சங்கள் இல்லாமல், சாதாரணமாகவே உள்ளது என கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரகுமானின் இசை ரசிகர்களின் மனதை வென்றுள்ளது.
மேலும் செய்திகள்: தளபதி விஜயுடன் விமானத்தில் விதவிதமாக செல்ஃபி... வரலட்சுமி சரத்குமார் புகைப்படத்துடன் பகிர்ந்த தகவல்..!
பாசிட்டிவான விமர்சனங்களே படத்திற்கு அதிகம் கிடைத்து வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளே 'கோப்ரா' திரைப்படம்... டெலிகிராம், தமிழ் ராக்கர்ஸ் போன்ற தளங்களில் HD தரத்தில் வெளியாகியுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 90 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை தமிழில் உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டள்ளது. இந்த படத்தில் நடிகர் விகாரமுக்கு ஜோடியாக கேஜி எப் பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் மிருணாளினி ரவி, மீனாட்சி, ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், பூவையார், கனிகா போன்ற பலர் நடித்துள்ளது குறிப்பிடதக்கது.
மேலும் செய்திகள்: இணையத்தை கலக்கும் ஜெயிலர், RRR, KGF போன்ற கெட்டப்பில் கலக்கும் பிள்ளையார்..! வைரல் போட்டோஸ்..!