தளபதி விஜயுடன் விமானத்தில் விதவிதமாக செல்ஃபி... வரலட்சுமி சரத்குமார் புகைப்படத்துடன் பகிர்ந்த தகவல்..!
நடிகை வரலட்சுமி சரத்குமார், தளபதி விஜயுடன் எடுத்து கொண்ட விதவிதமான செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டு, இன்றைய சிறப்பான நாள் குறித்து பகிர்த்துள்ள தகவல் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விஜய் சென்னையில் இருந்து ஹைதராபாத் போன விமானத்தில், எதேர்சையாக வரலட்சுமி சரத்குமாரை பார்க்க நேர்ந்துள்ளது.
அதுவும் விஜய் பக்கத்துக்கு சீட்டில் தான், வரலட்சுமிக்கு சீட் என்றால் சொல்லவா வேண்டும்..? இந்த அற்புதமான நாள் குறித்த சந்தோஷத்தை ரசிகர்களிடம் புகைப்படம் வெளியிட்டு பகிர்ந்துகொண்டுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
மேலும் செய்திகள்: இணையத்தை கலக்கும் ஜெயிலர், RRR, KGF போன்ற கெட்டப்பில் கலக்கும் பிள்ளையார்..! வைரல் போட்டோஸ்..!
தளபதி விஜயுடன் விதவிதமாக விமானத்தில் பறந்தபடி எடுத்து கொண்ட செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டு, இவ்வளவு நல்ல விமான பயணத்தை தான் அனுபவித்தது இல்லை என்றும், இன்றைய நாள் மிகவும் மகிழ்ச்சியாக அமைந்ததாக தெரிவித்துள்ளார். விஜய் தன்னுடைய பக்கத்திலேயே அமர்ந்து பயணித்தது குறித்தும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வரலட்சுமி சரத்குமார் நடிகர் விஜயுடன், சர்க்கார் படத்தில் இணைந்து நடித்துள்ளார். மேலும் அவர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்களில் விஜய்யின் நெற்றியில் குங்குமம் இருப்பதால், விநாயகர் சதுர்த்தியை முடித்து விட்டு, விஜய் ஷூட்டிங் கிளம்பியுள்ளாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் செய்திகள்: மகன் சிம்புவுக்கு பெண் கேட்டு போய்.. அசிங்கப்பட்டாரா டி.ராஜேந்தர்? என்ன ஆச்சு.. வெளியான அதிர்ச்சி தகவல்!
வரலட்சுமி தளபதி விஜய் மற்றும் கோ புரடியூசர் ஜெகதீஷ் பழனிச்சாமியுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.