மகன் சிம்புவுக்கு பெண் கேட்டு போய்.. அசிங்கப்பட்டாரா டி.ராஜேந்தர்? என்ன ஆச்சு.. வெளியான அதிர்ச்சி தகவல்!
நடிகர் சிம்புவுக்கு உறவினர்களிடம் பெண் கேட்க சென்று டி.ராஜேந்தர் அசிங்கப்பட்டதாக வெளியாகி உள்ள தகவல் கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தன்னுடைய மகன் சிலம்பரசனுக்கு ஒரு பெண்ணை பார்த்து, திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என அவரது தந்தை டி.ராஜேந்தர் போராடி வருகிறார். சிம்பு சில நடிகைகளின் காதல் கிசுகிசுவில் சிக்கும்போதெல்லாம், தன்னுடைய மகனின் ஆசை படியே திருமணம் நடக்கும் என தெரிவித்து வந்தார்.
கடைசியாக ஹன்சிகாவின் காதல் கிசுகிசுவில் சிம்பு சிக்கிய போது, இவர்கள் இருவருக்கும் திருமணம் வரை பேச்சுவார்த்தை நடந்த நிலையில், திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த பேச்சுவார்த்தை கைவிடப்பட்டது. பின்னர் ஹன்சிகா மீண்டும் சினிமாவில் நடிப்பதில் பிஸியானார். சிம்புவும் தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து அடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
மேலும் செய்திகள்: 'நட்சத்திரம் நகர்கிறது' படம் எப்படி இருக்கு? ஷார்ட் விமர்சனம் இதோ..
தற்போது நடிகர் சிம்புவுக்கு 40 வயது ஆகிவிட்ட நிலையில், தன்னுடைய சமூகத்தைச் சேர்ந்த பெண் கிடைத்தால், உடனடியாக சிம்புவுக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என சிம்புவின் பெற்றோர் முடிவு செய்துள்ளதாகவும், இதன் காரணமாக டி ராஜேந்தர் தன்னுடைய சொந்த ஊரான மயிலாடுதுறையில் உள்ள உறவினர்கள் மற்றும் தன்னுடைய சமூக்கடை சேர்ந்தவர்களிடம் பெண் கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அதில் சிலர் சிறந்த சிலம்பரசனின் வயதை குறிப்பிட்டு பெண் கொடுக்க மறுத்து விட்டதாகவும், இன்னும் சிலர் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு பெண் கொடுக்க தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: டைட் உடையில் ஹெவி ஒர்க் அவுட்..! உடலை வில்லாக வளைத்து சூடேற்றும் ரித்திகா சிங்..! ஹாட் போட்டோஸ்..
எனும் விடாமுயற்சியாக பெண் தேடும் படலத்தை கையில் எடுத்துள்ளார் டி.ராஜேந்தர். சமீபத்தில் கூட தொழிலதிபர் ஒருவரின் பெண்ணை சிலம்பரசனுக்கு பெண் கேட்டுள்ளார். அவர்கள் யோசித்து சொல்வதாக தெரிவித்ததாகவும், பின்னர் சிம்புவின் வயது மற்றும் அவர் சில நடிகைகளுடன் காதல் கிசுகிசுவில் வெளிப்படையாக சிக்கியுள்ளதை காரணம் காட்டி பெண் கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
பணம், வசதி, பெரிய குடும்பம் என அந்தஸ்தில் இருந்தாலும்... சிம்புவுக்கு பெண் கேட்க செல்லும் இடங்களில் எல்லாம், பலரும் பெண் முடியாது என அசிங்கப்படுத்துவது போல் கூறுவதால் மிகுந்த மனஉளைச்சலிலும் உள்ளாராம் டி.ராஜேந்தர். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், அந்த அளவிற்கு இதில் உண்மை உள்ளது என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: Cobra Review: விக்ரம் நடிப்பு விருதுகளை குவிக்கும்..! 'கோப்ரா' படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ!