Cobra Review: விக்ரம் நடிப்பு விருதுகளை குவிக்கும்..! 'கோப்ரா' படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ!
நடிகர் விக்ரம் நடிப்பில் நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ள 'கோப்ரா' திரைப்படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் சியான் விக்ரமின் 3 வருட காத்திருப்பு பின்னர், ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் 'கோப்ரா'. ரசிகர்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக உள்ள, இந்த படம் எப்படி இருக்கிறது என வெளிநாட்டு தணிகை குழு உறுப்பினர், உமர் சந்து வெளியிட்டுள்ள முதல் விமர்சனம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அஜய் ஞானமுத்து. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்கியுள்ள 'கோப்ரா' திரைப்படம் நாளை விக்ரம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் பல்வேறு தடைகளை கடந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. விக்ரம் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் மிருணாளினி ரவி, மீனாட்சி, ஸ்ரீநிதி ஷெட்டி, பூவையார், ரோஷன் ஆண்ட்ரூஸ், இர்பான் பதான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன் 1' ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் எப்போது..! படக்குழு வெளியிட்ட அதிகார பூர்வ அறிவிப்பு!
விக்ரம் 7 கெட்டப்புகளில் நடித்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் புரமோஷன் பணிகளும் கடந்த ஒரு வாரமாக தீவிரமாக நடைபெற்று வந்தது. திருச்சி, கோயபுத்தூர், மதுரை, பெங்களூர், கேரளா ஆகிய இடங்களுக்கு, நேரடியாக நடிகர் விக்ரம், நாயகிகள் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி மற்றும் மீனாட்சி ஆகியோர் சென்றனர். அப்போது விக்ரம் ரசிகர்களின் சுவாரஸ்யமான கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
மேலும் செய்திகள்: இதை மட்டும் செய்யவே மாட்டேன்! இந்த காரணத்தால் திரையுலகை விட்டு விலக தயாரான நயன்? விக்கி மீது அவ்வளவு காதலா!
'கோப்ரா' படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில், இந்த படத்தின் முதல் விமர்சனம் இப்போது வெளியாகியுள்ளது. இது குறித்து வெளிநாட்டு தணிக்கைக் குழு உறுப்பினர் உமைர் சந்து சமீபத்தில் படத்தைப் பார்த்து தனது கருத்தை ட்வீட் செய்துள்ளார். கோப்ராவுக்கு ஒரு தனித்துவமான யோசனையும் சிறந்த இயக்கமும் இருப்பதாக அவர் கூறியுள்ளார். சியான் விக்ரம் நடிப்பு விருதுக்கு ததகுதியானது என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்: சர்ச்சை ட்விட்... பின்னர் பிரபலங்களுக்கு நடந்த விபரீதம்! பிக்பாஸ் போட்டியாளர் விமான நிலையத்திலேயே அதிரடி கைது!
கிரிக்கெட் வீரர் இர்பான் பதானையும் உமர் சந்து பாராட்டியுள்ளார். கோப்ரா திரைப்படம் முக்கிய திருப்பங்கள் கொண்ட ஒரு சஸ்பென்ஸ் திரைப்படம் என்று குறிப்பிட்டார். இந்த படத்திற்கு 3.5 ரேட்டிங் அவர் கொடுத்துள்ளார். இவரது முதல் விமர்சனம் தற்போது சமூக வலைதளத்தில் விக்ரம் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது.