குழந்தை பெற்ற பிறகு... மீண்டும் தமிழில் முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகும் எமி ஜாக்சன்!
எமி ஜாக்சன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும், தமிழில் முன்னணி ஹீரோ ஓவருவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான 'மதராசப்பட்டினம்', என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லண்டனை சேர்ந்த நடிகை எமி ஜாக்சன். இதை தொடர்ந்து பாலிவுட் திரையுலகில், பிரதீக் பாப்பருடன் 'ஏக் தீவானா தா' என்கிற படத்தில் நடித்தார்.
முதல் படத்திலேயே ரசிகர்களை தன்னுடைய அழகால் கவர்ந்த எமி ஐசக்சன்... அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட் ஆகி நடிக்க துவங்கினார். கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் நடித்தார்.
மேலும் செய்திகள்: தளபதி விஜயுடன் விமானத்தில் விதவிதமாக செல்ஃபி... வரலட்சுமி சரத்குமார் புகைப்படத்துடன் பகிர்ந்த தகவல்..!
பின்னர் தமிழ் பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்த போதும், ஹாலிவுட்டில் நடித்து வந்த சூப்பர் கேர்ள் என்கிற தொலைக்காட்சி தொடர் காரணமாக சினிமா வாய்ப்புகளை நிராகரித்து விட்டு தொலைக்காட்சி தொடரில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தார்.
இடையில் திடீர் என கர்ப்பமாக இருப்பதை அறிவித்த எமி பின்னர் ஜனவரி 2019 இல், ஜார்ஜ் பனாயிடோவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். மேலும் அதே ஆண்டு செப்டம்பரில் இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்த இந்த ஜோடி திடீர் என, பிரிந்தனர்.
மேலும் செய்திகள்: இணையத்தை கலக்கும் ஜெயிலர், RRR, KGF போன்ற கெட்டப்பில் கலக்கும் பிள்ளையார்..! வைரல் போட்டோஸ்..!
எமி ஜாக்சன் தற்போது தன்னுடைய புதிய காதலருடன் டேட்டிங் செய்து வரும் நிலையில், மாடலிங் துறையிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் சுமார் நான்கு வருடங்களுக்கு பிறகு மீண்டும், தமிழ் படத்தில் நடிக்க உள்ளதா புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்க உள்ள படத்தில் தான் எமி ஜாக்சன் ஹீரோயினாக ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளாராம். இந்த படம் குறித்த தகவல் விரைவில் அதிகார பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்: தலைக்கேறிய ஓவர் போதையில்... நான்கு பேருடன் ஒரே சோபாவில் கட்டி உருளும் த்ரிஷா! வைரலாகும் வீடியோ..!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.