தலைக்கேறிய ஓவர் போதையில்... நான்கு பேருடன் ஒரே சோபாவில் கட்டி உருளும் த்ரிஷா! வைரலாகும் வீடியோ..!
நடிகை த்ரிஷா தலைக்கேறிய போதையில், தோழிகளுடன் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில், 'ஜோடி' படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக மாறியவர் நடிகை த்ரிஷா. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில், அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். குறிப்பாக அஜித், விஜய், கமல், ரஜினி, தனுஷ், சூர்யா என இவர் தமிழில் ஜோடி போட்டு நடித்திடாத முன்னணி நடிகர்கள் இல்லை எனலாம்.
35 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகை த்ரிஷாவிற்கு, கடந்த சில வருடங்களுக்கு முன்னர், பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், தொழிலதிபருமான வருண் மணியன் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அவரது ரசிகர்கள் த்ரிஷா திருமண பந்தத்தில் இணைவார் என காத்திருந்த நிலையில், திடீர் என தன்னுடைய திருமணம் நின்று விட்டதாக கூறி அதிரவைத்தார். பின்னர் நடிகர் ராணாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினாலும், திருமணத்தில் கைகூடவில்லை.
அவ்வப்போது இவரது திருமணம் குறித்த தகவல் வெளியாகி வரும் நிலையில், த்ரிஷா அப்படி வெளியாகும் தகவல்களை காதில் கூட வாங்கி கொள்ளாமல் வழக்கம் போல் தன்னுடைய நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் சமீப காலமாக, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அப்படி இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள், இவருக்கு கை கொடுக்காமல் போனது.
த்ரிஷா நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள 'பொன்னியின் செல்வன் 1' படத்தின் ரிலீசுக்காக கார்த்திர்க்குகிறார். மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், குந்தவை கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் த்ரிஷா. இவரது கதாபாத்திரம் பொன்னியின் செல்வன் கதையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் ஆகும். இதை தொடர்ந்து, சதுரங்க வேட்டை, தி ரோடு ஆகிய படங்களும் இவரது கைவசம் உள்ளது. மலையாளத்திலும் நடிகர் மோகன் லால் நடித்து வரும் ராம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படங்களில் ஒரு பக்கம் பிஸியான இவர் நடித்து வந்தாலும், வீக் எண்டில் அவ்வப்போது... தன்னுடைய நண்பர்களுடன் ஜாலியாக என்ஜாய் செய்கிறார். அந்த வகையில், த்ரிஷா தலைக்கேறிய போதையில் தோழிகளுடன், ஒரே சோபாவில் கட்டி பிடித்து அட்ராசிட்டி செய்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ இதோ...