MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தற்கொலை செய்து கொண்ட நடிகை சில்க் ஸ்மிதா.. இறுதி நேர உருக்கமான கடிதம்!

தற்கொலை செய்து கொண்ட நடிகை சில்க் ஸ்மிதா.. இறுதி நேர உருக்கமான கடிதம்!

தற்கொலை செய்து கொண்ட நடிகை சில்க் ஸ்மிதாவின் இறுதி நேர கடிதம் தற்போது வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Kanmani P
Published : Jul 07 2022, 04:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
silk smitha

silk smitha

விஜயலட்சுமி என்னும் இயற்பெயரை கொண்ட இவர் வண்டிச்சக்கரம் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். முன்னதாக மாற்றமொழி படங்களில் துணை நடிகையாக வந்துள்ளார். பின்னர் வண்டி சக்கரம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அதில் சாராயம் விற்கும் பெண்ணாக நடித்ததற்கு பிறகு விஜயலட்சுமி  கதாபாத்திர பெயரான சில்க் என்றே அழைக்கப்பட்டார்.

மேலும் செய்திகளுக்கு...சிறுமிகள் முன் நிர்வாண காட்சி...போக்சோவில் கைதான கும்கி பட நடிகர் !

இவர் மற்ற நடிகைகளை காட்டிலும் அதிகமாக காட்டிய கவர்ச்சியும், அவரது கிளாமர் உடைகளும் பலத்த வரவேற்பையும், இவர் குறித்த வேறு விதமான கண்ணோட்டத்தை உருவாக்கியது. தமிழில் அன்றைய உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், டி.ஆர், என முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ளார் சில்க்.

24
silk smitha

silk smitha

திரையுலகை பொறுத்தவரை கவர்ச்சி கன்னியாக இருந்த இவர் நிஜ வாழ்வில் மிக மென்மையானவராகவும், குழந்தை தனமானவர் என்றும் அவரின் நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு நேரம் தவறாதவரும் கூட. இவ்வாறு  நல் மதிப்புகளையும், அதிக வாய்ப்புகளை பெற்று வந்த சில்க் ஸ்மிதா திடீரென தற்கொலை செய்து கொண்டது இன்றும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகவே உள்ளது.

34
silk smitha

silk smitha

தற்கொலை செய்து கொள்வதற்கு முந்தைய நாள் தன் தோழியான அனுராதாவிற்கு போன் செய்த சில்க் ஸ்மிதா, தன்னை மிகவும் கவலைக்குள்ளாக்கும் விஷயம் குறித்து மனமுடைந்து பேசியுள்ளார்.. பின்னர் அனுராதா சோகமாக பேசிய தன் தோழியை வீட்டில் சந்திக்க வந்த போது, சில்க் ஸ்மிதா தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்சியடைந்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரியங்கா சோப்ரா.. மகள் குறித்து நிக்கின் சகோதரர் வெளியிட்ட வைரல் பதிவு!

பின்னர் காவல்துறையால் கைப்பற்றப்பட்ட இவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் இதுகுறித்த  அறிக்கை வெளியானது. அதில் ஸ்மிதாவின் உடலில் அதிக அளவு ஆல்கஹால் இருந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது.

44
silk smitha

silk smitha

இந்நிலையில் சில்க் ஸ்மிதாவின் இறுதி நேர கடிதம் தற்போது வைரலாகி வருகிறது. அதில்  “ஒரு நடிகையாக நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். என்னை யாருக்கும் பிடிக்கவில்லை. பலரின் செயல்கள் என்னை தொந்தரவு செய்தது. ஆனால் மரணத்திற்கு என்னை பிடித்துள்ளது. பலர் என் உடலையும், சிலர் என் உழைப்பையும் பயன்படுத்தி கொண்டனர். ஒருவர் எனக்கு வாழ்க்கை கொடுப்பதாக 5 வருடமாக ஏமாற்றி வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு..அடுத்த முதல்வர் இவர் தான்..சூசகமாக ட்வீட் போட்ட பார்த்திபன்!

நான் சம்பாதித்த சொத்தில் பாதியை பாபு(டாக்டர் ராதாகிருஷ்ணன் ) வுக்கு கொடுக்க வேண்டும். நான் அவரை உண்மையாக நேசித்தேன். ஆனால் அவரும் என்னை ஏமாற்றிவிட்டார். கடவுள் இருந்தால் கண்டிப்பாக அவர் தண்டிக்கப்படுவார். அவர்களால் எனக்கு நடந்த கொடுமையை என்னால் தாங்க முடியவில்லை. இனியும் நான் வாழ விரும்பவில்லை.  அவர்களுக்காக நான் பல நல்ல விஷயங்களை செய்திருக்கிறேன். ஆனால் என்னை மரணத்திற்கு தள்ளி விட்டார்கள். என உருக்கமாக எழுதியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
சில்க் ஸ்மிதா
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
சந்தாவை திருமணம் செய்ய மறுக்கும் சேரன்... நிலாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image2
Ethirneechal: எதிர்நீச்சலில் மெகா ட்விஸ்ட்! கோலங்கள் நாயகியின் மிரட்டலான கம்பேக்! இனி ஆதி குணசேகரனுக்கு ஆப்பு கட்டாயம்.!
Recommended image3
அஜித்தை போலவே துபாயில் சிக்கிய முன்னணி தமிழ் நடிகர்! போர் பதற்றத்தின் நடுவே வெளியிட்ட உருக்கமான பதிவு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved