MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தங்கலான் படப்பிடிப்பில் மூக்கில் காயத்தோடு விக்ரம்! அடையாளம் தெரியாமல் இப்படி ஆகிட்டாரே.. வைரலாகும் போட்டோஸ்!

தங்கலான் படப்பிடிப்பில் மூக்கில் காயத்தோடு விக்ரம்! அடையாளம் தெரியாமல் இப்படி ஆகிட்டாரே.. வைரலாகும் போட்டோஸ்!

'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டு நடித்து வருவதை, தெரிவிக்கும் விதமாக இவர் மேக்கப் போடும் போட்டோஸ், சிலவற்றை வெளியிட... அவை தாறுமாறாக பார்க்கப்பட்டு வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
Published : Jun 28 2023, 02:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

சமீபத்தில் 'தங்கலான்' படப்பிடிப்புக்காக தயாராகும், புகைப்படங்கள் சிலவற்றை நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டு, 4 முதல் 5 மணி வரை தினமும் மேக்கப் போடுவதாக கூறியிருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

இதைத்தொடர்ந்து தற்போது நடிகர் விக்ரம், 'தங்கலான்' படப்பிடிப்புக்காக மேக்கப் போட்டு தயாராகும் புகைப்படங்களை வெளியிட, அவை தாறுமாறாக பார்க்கப்பட்டு வருவதோடு, எப்படி இருந்த விக்ரம் இப்படி ஆகிவிட்டாரே? என ரசிகர்கள் அதிர்ச்சி கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். அந்த அளவுக்கு 'தங்கலான்' படப்பிடிப்புக்காக ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் விக்ரம்.

கீழே பார்த்ததுமே பக்குனு ஆகிடுச்சு! சமந்தாவை இப்படி ஒரு உடையில் பார்த்து ஒரு நிமிடம் மிரண்டு போன ரசிகர்கள்.!

38

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடித்தவரும் திரைப்படம் 'தங்கலான்'. சமீபத்தில் விக்ரம், ஆதித்த கரிகாலனாக நடித்திருந்த 'பொன்னியின் செல்வன்'  திரைப்படத்தின் இரண்டு பாகங்களும், மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் இவர் தனி ஹீரோவாக நடித்து கடந்த இரண்டு மூன்று வருடங்களாக வெளியாகும் எந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
 

48

எனவே ஒரு தனி ஹீரோவாக, தன்னுடைய வெற்றியை பதிவு செய்யும் கட்டாயத்தில் விக்ரம் தள்ளப்பட்டிருக்கும் நிலையில்.. வழக்கம்போல் தன்னுடைய வித்யாசமான பாணியில் விக்ரம் பல்வேறு ரிஸ்குகள் எடுத்த நடித்துவரும் திரைப்படம் தங்கலான். இப்படம் கேஜிஎப் பட பாணியில் தங்கம் எடுக்கும் தொழிலாளர்கள் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.

உதட்டில் முத்தம்! மகளா போயிட்டார் இல்லனா திருமணம் செஞ்சிப்பேன் சர்ச்சையை ஏற்படுத்திய இயக்குனர்! யார் தெரியுமா?
 

58

இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி நடித்து வருகிறார். மேலும் மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.  'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கிய நிலையில், இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடையும் என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

68

மேலும் சமீபத்தில் நடிகர் விக்ரமின் காட்சிகள் எடுக்கப்பட்டபோது, அவர் கீழே விழுந்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்டதோடு, விலா எலும்பும் முறிந்தது.  இதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைக்கு பின் தற்போது உடல் நலம் தேறியுள்ள விக்ரம், மீண்டும் 'தங்கலான்'  படப்பிடிப்பில் பங்கேற்க துவங்கியுள்ளார்.

நாட்டு மக்களை அறிவில்லாதவர்கள் என நினைத்தார்களா? ஆதிபுருஷ் படக்குழுவுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி!

78

இந்நிலையில் படப்பிடிக்காக மேக்கப் போட்டு தயாராகும் சில புகைப்படங்களை விக்ரம் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு மதுரையில் இன்னும் ஓரிரு வாரங்களில் துவங்கும் என்றும், இதோடு மொத்த படப்பிடிப்பையும் பா ரஞ்சித் முடிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

88

மேலும் தற்போது வெளியாகி உள்ள விக்ரமின் புகைப்படத்தில், அவருக்கு மூக்கில் காயம் ஏற்பட்டது போன்ற மேக்கப் போடப்பட்டுள்ளது. மேலும் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு தாடி - மீசையோடு கண்ணம் எல்லாம் சுருங்கி, வேறு ஒரு விதமான லுக்கில் விக்ரம் இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Captain Miller:'கேப்டன் மில்லர்' ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பா. இரஞ்சித்
நடிகர் விக்ரம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved