Asianet News TamilAsianet News Tamil

நாட்டு மக்களை அறிவில்லாதவர்கள் என நினைத்தார்களா? ஆதிபுருஷ் படக்குழுவுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி!

ஆதிபுருஷ் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனங்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றம் படக்குழுவினரை சரமாரியான கேள்விகளால் அதிரவைத்துள்ளது.
 

The Allahabad High Court has lashed out at the Adipurush makers and censor members
Author
First Published Jun 27, 2023, 9:05 PM IST

பாகுபலி நாயகன், பிரபாஸ் நடிப்பில், இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த திரைப்படம் ஆதிபுருஷ். இதில் ஸ்ரீ ராமராக பிரபாஸ் நடித்திருந்தார். ஜானகியாக பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை கீர்த்தி சனோன் நடித்திருந்தார். இப்படத்தை இயக்குனர் ஓம் ராவத் சுமார் 600 கோடி பட்ஜெட்டில் இயக்கி இருந்தார். மேலும் இந்த படத்தில் இலங்கை மன்னன் ராவணனாக பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் நடித்திருந்தார்.

3டி அனிமேஷனில் உருவாக்கப்பட்ட இந்த படம்,  தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் கடந்த ஜூன் 16-ந் தேதி வெளியானது. பாகுபலி படத்திற்கு பின்னர் பிரபாஸ் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவி வரும் நிலையில், இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது. பிரபாஸின் ரசிகர்களும் ஆரவாரத்தோடு வரவேற்றனர். மேலும் இப்படம் வெளியாகும் திரையரங்குகளில், அனுமனுக்கு ஒரு சீட் ஒதுக்க கூறி, படக்குழு கேட்டு கேட்டு கொண்டதற்கு இணங்க  அவ்வாறே திரையரங்கங்களும் செய்தன.

The Allahabad High Court has lashed out at the Adipurush makers and censor members

மகன் கௌஷிக் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடிய ரோஜா! வைரலாகும் போட்டோஸ்.!

ஆனால் இப்படம், ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்களை சந்தித்தது. முதல் நாள் வசூல் களைகட்டிய போதிலும், அடுத்தடுத்து தியேட்டர்களில் ஈ ஓட்டும் நிலை ஏற்பட்டதால் ஒரே வாரத்தில் இப்படம் திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது. அதே போல் இந்த படத்தில் இடம்பெற்ற, 'சீதா இந்தியாவின் மகள்' என்பது போன்ற வசனங்களும், ஒரு சில காட்சிகளும் சர்ச்சைகளுக்கு வித்திட்டது. 

The Allahabad High Court has lashed out at the Adipurush makers and censor members

அதே போல் ஆதிபுருஷ் படத்திற்கு தடைவிதிக்கக்கோரி அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் சார்பில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. அதில், “ஆதிபுருஷ் திரைப்படத்தின் திரைக்கதை, வசனம் ஆகியவை இந்துக்களின் மத உணர்வையும் சனாதன தர்மத்தையும் புண்படுத்தும் வகையில் உள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ராமன் மற்றும் ராவணன் கதாபாத்திரங்கள் வீடியோ கேமில் வரும் பொம்மை போல் காட்டப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி இப்படத்தின் வசனங்களும் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளது. அதனால் இப்படத்தை திரையிட தடை விதிப்பதோடு, ஓடிடியில் வெளியிடவும் தடை விதிக்க வேண்டும். அதோடு இப்படத்தின் இயக்குனர் ஓம் ராவத், எழுத்தாளர் மனோஜ் சுக்லா மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர் போட்டு உள்ளே தள்ள வேண்டும். ஆதிபுருஷ் திரைப்படம் ஒரு டிசாஸ்டர் என்றும் அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

Captain Miller:'கேப்டன் மில்லர்' ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

The Allahabad High Court has lashed out at the Adipurush makers and censor members

இதை தொடர்ந்து, ஆதிபுருஷ் பட வசனம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்த, அலகபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை... படக்குழுவினரையும் - தணிகை குழுவினரையும் சரமாரி கேள்விகளால் திணற வைத்துள்ளது.

நொடிக்கு நொடி திரில்லிங்..! சூப்பர் ஹிட் வெற்றிபெற்ற 'போர் தொழில்' OTT ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியானது!

இது குறித்து நீதிமன்றம் விசாரணையில், "ஆதிபுருஷ் படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்ட விதம், இந்து மத உணர்வுகளை காயப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது. நாட்டு மக்களை அறிவில்லாதவர்கள் என நினைத்தீர்களா? படம் பார்த்த மக்கள் சட்ட ஒழுங்கை சீர்குலைக்காமல் இருந்தது ஆச்சரியம். அனுமனும் - சீதையும் முக்கியத்துவம் இல்லாதவர்களாக காட்சி படுத்தப்பட்டுள்ளனர். சில காட்சிகளை நீக்கி இருக்க வேண்டும். சில காட்சிகள் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பார்க்கக்கூடியவை. இது போன்ற படங்களை பார்ப்பது மிக கடினம். இது முக்கியமான விஷயம். படத்தை முறையாக தணிக்கை செய்ய சென்சார் வாரியம் ஏன் தவறியது? என தணிகை குழுவிற்கும் நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் விசாரணையின் போது, தயாரிப்பாளர், இயக்குனர், மற்றும் பிற சமந்தப்பட்டவர்கள் ஏன் ஆஜராகவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியதோடு மட்டும் இன்று சம்பந்தப்பட்டவர்களுக்கு அது தொடர்பான நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios