Captain Miller:'கேப்டன் மில்லர்' ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

தனுஷ் நடித்து வரும் 'கேப்டன் மில்லர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த தகவலை, தற்போது படக்குழு அதிகார பூர்வமாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
 

Dhanush starring Captain Miller first look release date announced

தமிழ் திரையுலகை தாண்டி, பாலிவுட் - ஹாலிவுட் என தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உலக அளவில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்துள்ளவர் தனுஷ். தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இவர் நடித்து வரும் 'கேப்டன் மில்லர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷ் ஒரே மாதிரியான கதைகளத்தை தேர்வு செய்து நடிக்காமல், கர்ணன், அசுரன், திருச்சிற்றம்பலம், வாத்தி, என தொடர்ந்து தன்னுடைய அடுத்தடுத்த படங்களை வித்யாசமான கதை களத்தில் நடித்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்க வைத்தவர். மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், வாத்தி, போன்ற படங்கள் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்து சாதனை படைத்தது.

Dhanush starring Captain Miller first look release date announced

ரஜினி, அஜித் உட்பட கொடூர விபத்தில் சிக்கிய டாப் பிரபலங்கள்! யார் யார்?

இந்தப் படங்களைத் தொடர்ந்து, தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பீரியாடிக் கதையம்சம் கொண்ட 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படம் மூன்று பாகங்களாக எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சுதந்திரம் வாங்கிய காலகட்டத்திற்கு முன்பு ,அதாவது 1940 வருடங்களில் முதல் பாகம் உருவாகி வருவதாகவும், இரண்டாம் பாகம் 1990 காலகட்டத்தில் நடப்பது போன்றும், மூன்றாம் பாகம் சமீபத்திய காலகட்டத்திற்கு ஏற்ற போல் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

Dhanush starring Captain Miller first look release date announced

நொடிக்கு நொடி திரில்லிங்..! சூப்பர் ஹிட் வெற்றிபெற்ற 'போர் தொழில்' OTT ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியானது!

மேலும் இந்த படத்தில், தனுஷுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். நிவேதிதா, ஜான் கொக்கேன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாக்கி வரும், 'கேப்டன் மில்லர்' படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இது ஒரு பீரியாடிக் கதை அம்சம் கொண்ட படம் என்பதால், மலை, காடு, போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. சமீபத்தில் மதுரையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Dhanush starring Captain Miller first look release date announced

மாளவிகா மோகனனின் காதலர் இவரா? பாத் ரூமில் தோளில் சாய்ந்து ரொமான்ஸ் செய்யும் போட்டோஸ் வைரல்!

இந்த படத்தில் தனுஷின் கதாபாத்திரம் குறித்து வெளியாகியுள்ள தகவலில், தனுஷ் போராளியாக நடிப்பதாக கூறப்படுகிறது.அதே போல் அவ்வப்போது, இப்படம் குறித்த சுவாரசிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில், தற்போது 'கேப்டன் மில்லர்' ஃபர்ஸ்ட் லுக் குறித்த தகவலை சத்யஜோதி பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது. அதன்படி கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஜூன் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த தகவல் தனுஷின் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios