கீழே பார்த்ததுமே பக்குனு ஆகிடுச்சு! சமந்தாவை இப்படி ஒரு உடையில் பார்த்து ஒரு நிமிடம் மிரண்டு போன ரசிகர்கள்.!
நடிகை சமந்தா சிட்டாடல் வெப் தொடருக்காக இப்போது செர்பியா சென்றுள்ள நிலையில்... படப்பிடிப்பை முடிந்த பின்னர் வெளியிடங்களுக்கு சென்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட அது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
நடிகை சமந்தா தற்போது செர்பியாவில் இருக்கிறார். இவர் நடித்து வந்த வெப் தொடரான, சிட்டாடலின், சமீபத்திய படப்பிடிப்புஅங்கு நடைபெற்றது. இதன் காரணமாக சமந்தா மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினரும் அங்கு தான் உள்ளனர்.
மேலும் 'சிட்டாடல்' தொடர் குறித்து தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவலின் படி, சமந்தா நடிக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும், அதே போல் விரைவில் சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் இந்தியா திரும்புவார்கள் என கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு வருவதற்கு முன்னர், நடிகை சமந்தா செர்பியா நகரில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து. அதன் அழகை ரசித்து வருகிறார். மேலும் தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக செல்லும் இடங்களில் எல்லாம் புகைப்படம் எடுத்து அதனை வெளியிட்டு வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் சமந்தாவின் சில புகைப்படங்கள் சில வெளியாகி? ரசிகர்களை பக் என ஆக்கியுள்ளது. அதற்க்கு காரணம் அவரின் உடை தான். ஸ்கின் கலர் டைட் பேன்ட் அணிந்துள்ளார். இந்த உடையில் இவரை சட்டென பார்க்கும் போது, கீழே பேன்ட் போட்டிருக்கிறாரா? என சந்தேகத்தை எழுப்ப செய்துள்ளது. மேலும் குறிப்பிட்ட இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் தாறுமாறாக பார்க்கப்பட்டு வருகிறது.
செர்பியாவிற்கு சென்றுள்ள சிட்டாடல் குழு, அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து, வருண் தவான், சமந்தா, ராஜ் மற்றும் டிகே ஆகியோர் ஜனாதிபதியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படங்களை அவர்கள் வெளியிட அது மிகவும் வைரலாக பார்க்கப்பட்டது.
சமந்தா நடித்து வரும் சிட்டாடல் தொடரில் ஆங்கிலத்தில் பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். அதன் இந்திய பதிப்பில் சமந்தா நடிக்கிறார். சிட்டாடல் தொடரை தி ஃபேமிலி மேன் புகழ் ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ளனர். வருண் தவான், சமந்தா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் என்பது குறிபிடத்தக்கது.
மகன் கௌஷிக் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடிய ரோஜா! வைரலாகும் போட்டோஸ்.!