ஒரு சாதாரண இயக்குநரால் சூர்யாவிற்கு ஹிட் கொடுக்க முடியுமா?
Suriya Next Movie Likely to Hit : சூர்யா நடிப்பில் வெளியாகி வரும் படங்கள் பெரும்பாலும் தோல்வியை கொடுத்து வரும் நிலையில் ஒரு சாதாரண இயக்குநரால் சூர்யாவிற்கு ஹிட் படத்தை கொடுக்க முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா:
Suriya Next Movie Likely to Hit : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. ஆனால், சமீப காலமாக ஒரு சாதாரண நடிகர் கொடுக்கும் ஹிட் படத்தை கூட முன்னணி நடிகரான சூர்யாவால் கூட கொடுக்க முடியவில்லை. சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே, காப்பான், எதற்கும் துணிந்தவன், கங்குவா ஆகிய படங்கள் வரிசையாக தோல்வி படங்களாக அமைந்துவிட்டன.
அதிக எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த ரெட்ரோ:
சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கங்குவா ரசிகர்களிடையே மோசமான விமர்சனத்தை பெற்ற நிலையில் வசூல் ரீதியாகவும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதன் பிறகு தான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வந்த ரெட்ரோ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், இந்தப் படமும் வசூல் ரீதியாக சரிவை சந்தித்தது. ரெட்டோ படம் வெளியாகி 13 நாட்கள் கடந்த நிலையில் இதுவரையில் இந்தியா முழுவதும் ரூ.60 கோடி வரையில் வசூல் குவித்தது.
ரெட்ரோ கலவையான விமர்சனம்
ரெட்ரோ கலவையான விமர்சனம் பெற்றது. ஆனால், வசூல் ரீதியாக பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இப்படி அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்து வரும் சூர்யாவிற்கு ஒரு சாதாரண இயக்குநரால் ஹிட் கொடுத்திட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு காரணம் அவர் தனது 45ஆவது படமான இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
சூர்யாவிற்கு ஹிட் கொடுக்க முடியாத நிலை
இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். சூர்யா இத்தனை இயக்குநர்களை கடந்து வந்த போதிலும் ஹிட் கொடுக்க முடியாத நிலையில் இப்போது அவரது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது இயக்குநர் ஆர்ஜே பாலாஜி. இந்தப் படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்மீக கதையை மையப்படுத்திய சூர்யா45 படம்
முழுக்க முழுக்க ஆன்மீக கதையை மையப்படுத்தி சூர்யா45 படம் உருவாகி வருகிறது. சூர்யாவின் ரெட்ரோ படம் தமிழ் மொழியை தவிர மற்ற மொழி படங்களில் பெரிதாக வசூல் குவிக்கவில்லை. இயக்குநர் ஆர்ஜே பாலாஜி ஒரு நடிகர் என்பதையும் தாண்டி அவர் ஒரு சிறந்த இயக்குநர். மூக்குத்தி அம்மன் படத்தின் மூலமாக தன்னை ஒரு இயக்குநராக நிலை நிறுத்திக் கொண்டார்.
இதுவரையில் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் எத்தனையோ இயக்குநர்கள் வந்திருந்தாலும் ஒரு சில படங்களை ஹிட் கொடுத்திருந்த நிலையில் இப்போது இயக்குநர் ஆர்ஜே பாலாஜியின் படத்தை ஹிட் கொடுக்க காத்திருக்கிறார். ஆனால், அவர் ஹிட் கொடுப்பாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.