MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Suriya Sivakumar: இளையராஜாவுக்கு பரிசோடு சென்று வாழ்த்து கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா - சிவகுமார்!

Suriya Sivakumar: இளையராஜாவுக்கு பரிசோடு சென்று வாழ்த்து கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா - சிவகுமார்!

லண்டனில் தனது முதல் சிம்பொனி, இசை அரங்கேற்றம் செய்து விட்டு இந்தியா  திரும்பிய இளையாஜாவுக்கு நடிகர் சிவக்குமார் தங்க பரிசு கொடுத்து வாழ்த்தியுள்ளார். 

1 Min read
Author : manimegalai a
| Updated : Mar 19 2025, 05:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இசைஞானி இளையராஜா கடந்த மார்ச் 8 ஆம் தேதி லண்டனில் தனது சிம்பொனி வேலியண்ட் இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினார். இதற்கு முன்பு வெளிநாட்டு கலைஞர்கள் சிம்பொனியை இசையை அரங்கேற்றிய நிலையில், ஆசியாவிலேயே முதல் முறையாக சிம்பொனி இசையை அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்தார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சமீபத்தில் பிரதமரை சந்தித்த இளையராஜா:

சமீபத்தில் பிரதமரை சந்தித்த இளையராஜா:

வெறும் 35 நாட்களிலேயே உருவாக்கப்பட்டது இளையராஜாவின் முதல் சிம்பொனி இசை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நாடு திரும்பிய அவருக்கு, நாடு முழுவதிலுமிருந்து வாழ்த்து குவிந்து வருகிறது. இவ்வளவு ஏன் பிரதமர் மோடி கூட நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

Ilaiyaraaja: பிரதமர் மோடியின் பாராட்டுக்கு தலைவணங்குகிறேன்; இளையராஜா நெகிழ்ச்சி பதிவு!

34
சிவகுமார் மற்றும் சூர்யா இளையராஜாவுக்கு நேரில் வாழ்த்து

சிவகுமார் மற்றும் சூர்யா இளையராஜாவுக்கு நேரில் வாழ்த்து

இந்த நிலையில் தான் நடிகர் சிவகுமார் தனது மகன் சூர்யா மற்றும் மகள் பிருந்தாவுடன் நேரில் சென்று இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது சிவகுமார் தங்கசங்கிலி ஒன்றை பரிசாக அணிவித்தார். சூர்யா மற்றும் பிருந்தா இருவரும் பூங்கொடுத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

44
தங்க சங்கிலி அணிவித்து வாழ்த்து கூறிய சிவகுமார்

தங்க சங்கிலி அணிவித்து வாழ்த்து கூறிய சிவகுமார்

சிவகுமார் நடிப்பில் வந்த அன்னக்கிளி படத்திற்கு தான் இசையமைப்பாளர் இளையராஜா முதல் முறையாக இசையமைத்தார். இந்தப் படம் தான் இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகம் செய்து வைத்தது. இந்த ப்படத்தைப் போன்று நான் பாடும் பாடல், சிந்து பைரவி, ஆனந்த ராகம், பாச பறவைகள், ஒருவர் வாழும் ஆலயம் என்று பல சிவகுமாரின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். 80 வயதிலும் இசை மீது உள்ள காதலால் இசைத்துறையில் பல சாதனைகளை செய்து வரும் இளையராஜா இதுவரை 1000-தீர்க்கும் மேற்பட்ட படங்களுக்கும், 15,000-திற்கும் மேற்பட்ட பாடல்களையும் இசையமைத்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இசைஞானி இளையராஜாவுக்கு விழா எடுக்கும் தமிழக அரசு! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
இளையராஜா
Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!
Recommended image2
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image3
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved