- Home
- Cinema
- சூர்யாவுக்கு நல்லநேரம் ஸ்டார்ட் ஆகிடுச்சு; ஷூட்டிங்கே தொடங்கல அதற்குள் கோடிகளை குவிக்கும் Suriya 46
சூர்யாவுக்கு நல்லநேரம் ஸ்டார்ட் ஆகிடுச்சு; ஷூட்டிங்கே தொடங்கல அதற்குள் கோடிகளை குவிக்கும் Suriya 46
ரெட்ரோ படத்தின் நாயகன் சூர்யா அடுத்ததாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திற்கான ஓடிடி உரிமையை பெரும் தொகை கொடுத்து வாங்கி உள்ளது நெட்பிளிக்ஸ்.

Suriya 46 OTT Rights Sold
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடித்த ரெட்ரோ திரைப்படம் மே 1ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படம் திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது. இப்படத்தை 2டி நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். இப்படம் சூர்யாவுக்கு கம்பேக் படமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
சூர்யாவின் அடுத்த படம்
ரெட்ரோ படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் சூர்யா 46. இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்க உள்ளார். இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஏற்கனவே வாத்தி, லக்கி பாஸ்கர் என இரண்டு வெற்றிப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி, முதன்முறையாக நடிகர் சூர்யா உடன் இணைய உள்ளதால், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
சூர்யாவுடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சூர்யா 46 திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் ஆரம்பமாகாத நிலையில், தற்போதே சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூர்யா 46 ஓடிடி உரிமை
அதன்படி சூர்யா 46 படத்தின் திரையரங்க ரிலீசுக்கு பிந்தைய ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாம். அந்நிறுவனம் ரூ.85 கோடிகள் கொடுத்து சூர்யா 46 பட ஓடிடி உரிமையை கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழுவும் செம குஷியில் உள்ளதாம். தற்போது சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள ரெட்ரோ திரைப்படத்தின் ஓடிடி உரிமையையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.