கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வரும் சூர்யா கைவசம் அரை டஜன் படங்களை வைத்திருக்கிறார்.
நடிகர் சூர்யாவின் 45வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இதில் சூர்யா ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.
சூர்யாவின் 46வது படத்தை வெங்கி அட்லூரி இயக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க உள்ளது.
வெற்றிமாறன் இயக்க உள்ள வாடிவாசல் படமும் சூர்யா கைவசம் உள்ளது. தாணு தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடக்கிறது.
எல்சியு படமாக உருவாக உள்ள கைதி 2-விலும் நடிகர் சூர்யா ரோலெக்ஸ் ஆக கேமியோ ரோலில் நடிக்க உள்ளார்.
சூர்யாவை வைத்து ரோலெக்ஸ் என்கிற திரைப்படத்தை இயக்க உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருக்கிறார்.
மலையாளத்தில் மின்னல் முரளி படத்தை இயக்கிய பெசில் ஜோசப் இயக்கத்திலும் சூர்யா நடிக்க உள்ளாராம்.
இதுதவிர நடிகர் சூர்யா பாலிவுட்டிலும் எண்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறாராம். அங்கு பான் இந்தியா படமொன்றில் அவர் நடிக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
பிரதமர் மோடி ஒரு போராளி - நடிகர் ரஜினிகாந்த் சூளுரை
கண்டிப்பாக பார்க்க வேண்டிய அனுஷ்கா ஷர்மாவின் 7 படங்கள்!
பாகுபலி 2: பிரபாஸ், அனுஷ்கா உள்ளிட்டோர் வாங்கிய சம்பளம் எவ்வளவு?
ஜெயிலர் 2-வில் இணையும் ரஜினியின் ஜிகிரி தோஸ்து!