பிக்பாஸ் ஆயிஷாவிற்கு விரைவில் திருமணமா? வித்தியாசமாக காதலரை அறிமுகம் செய்த நடிகை! வைரலாகும் புகைப்படம்!
பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளரான சீரியல் நடிகை ஆயிஷா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட, அது வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளரான சீரியல் நடிகை ஆயிஷா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட, அது வைரலாகி வருகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'சத்யா' சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஆயிஷா. இதில் யாருக்கும் அடங்காத துரு துரு பெண்ணாக, நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஆயிஷா, சில ஆல்பம் பாடல்களும் நடித்துள்ளார்.
ரிசார்ட் ஓனரை 13 வருடங்களாக காதலித்து வரும் கீர்த்தி சுரேஷ்! யார் அவர்? வெளியான பரபரப்பு தகவல்!
இதன் விளைவாக குறைவான வாக்குகளுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். சமீபத்தில் கூட, பிக்பாஸ் ஃபைனல் நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டபோது, ஆயிஷா மட்டும் கலந்து கொள்ளவில்லை.
தற்போது ஆயிஷா போட்டுள்ள பதிவு தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் தன்னுடைய காதலரின் முகம் தெரியாதபடி, விரைவில் காதலரை அறிமுகம் செய்கிறேன் என கூறி... ஹார்டின் காட்டியபடி புகைப்படம் பதிவிட்டுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
பேனர்களை தீயிட்டு எரித்து... நாடு முழுவதும் பதான் படத்திற்கு எதிராக இந்து அமைப்புகள் போராட்டம்
பிக்பாஸ் வீட்டில், தனலக்ஷ்மியுடன் பேசிக்கொண்டிருந்த போது, யோகேஷ் என்பவரை காதலித்து வருவதாகவும், அவருடைய வீட்டில் சம்மதம் தெரிவித்த போதிலும்... தன்னுடைய வீட்டில் சம்மதிக்கவில்லை என கூறி இருந்தார்.
விரைவில் காதலரை அறிமுகம் செய்வதாக இவர் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளதால், ஆயிஷாவுக்கும் அவருடைய காதலருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதை அறிவிக்கும் விதமாகவே அவர் இப்படி ஒரு பதிவை போயுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
மேலும் ஏற்கனவே சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத வகையில், ஆயிஷாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகிவிட்டதாக, அவரின் முன்னாள் காதலர் என்று கூறி, தேவ் என்பவர் ஆயிஷா பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.