கொசுவலை போன்ற ஆடையில்... கண் கூசும் அளவிற்கு கவர்ச்சியை கொட்டி... வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த திவ்ய பாரதி!!
பேச்சிலர் பட நாயகியான நடிகை திவ்ய பாரதியின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான பேச்சிலர் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தவர் திவ்ய பாரதி. முதல் படத்திலேயே சவாலான வேடத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்ற இவருக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.
பேச்சிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் திவ்ய பாரதி நடிப்பில் மதில்மேல் காதல் என்கிற ரொமாண்டிக் திரைப்படம் தயாராகி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் டைட்டில் ஜெயித்த முகென் ராவ் தான் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தை வெப்பம் படத்தின் இயக்குனர் அஞ்சனா இயக்கி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... சர்ப்ரைஸாக வந்து... சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு புத்தாண்டு பரிசுகளை வாரி வழங்கிய நயன்தாரா - வைரல் வீடியோ
இதுதவிர ஆசை என்கிற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார் திவ்ய பாரதி. இது மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற இஷ்க் என்கிற காதல் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிர் தான் இப்படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் திவ்ய பாரதி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கொசுவலை போன்ற மேலாடை அணிந்து உச்சகட்ட கவர்ச்சியாக நடிகை திவ்ய பாரதி நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... பிரின்ஸ் பட தோல்விக்கு பொறுப்பேற்று... நஷ்ட ஈடு வழங்கிய சிவகார்த்திகேயன் - எத்தனை கோடி கொடுத்தார் தெரியுமா?