சர்ப்ரைஸாக வந்து... சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு புத்தாண்டு பரிசுகளை வாரி வழங்கிய நயன்தாரா - வைரல் வீடியோ

வழக்கமாக புத்தாண்டுக்கு ஜோடியாக வெளிநாடு செல்வதை வழக்கமாக வைத்திருந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி இந்த வருட புத்தாண்டை சற்று வித்தியாசமாக கொண்டாடி உள்ளனர். 

Nayanthara and vignesh shivan distributes new year gifts to Chennai road side peoples

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. கடந்த 2022-ம் ஆண்டு நயன்தாராவுக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. ஏனெனில் நயன்தாரா தனது நீண்ட நாள் காதலனான விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு தான் கரம்பிடித்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி திருமணமான நான்கே மாதத்தில் நயன் - விக்கி ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. வாடகைத் தாய் முறையில் பிறந்த இந்த குழந்தைகளுக்கு உயிர், உலகம் என பெயரிட்டுள்ளனர். இப்படி ரியல் லைஃப் நயன்தாராவுக்கு சிறப்பாக அமைந்ததைப் போல் ரீல் லைஃபிலும் இவருக்கு வெற்றிகள் கிடைத்தன. 

இதையும் படியுங்கள்... வா தலைவா... 'வாரிசு' படத்தின் ட்ரைலர் ரிலீஸ் எப்போது? வெளியான மாஸ் அப்டேட்..!

கடந்தாண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து கடந்த மாதம் வெளிவந்த கனெக்ட் திரைப்படமும் திரையரங்குகளில் 2 வாரங்களைக் கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது.

வழக்கமாக புத்தாண்டுக்கு ஜோடியாக வெளிநாடு செல்வதை வழக்கமாக வைத்திருந்த நயன் - விக்கி ஜோடி இந்த வருட புத்தாண்டு வித்தியாசமாக கொண்டாடி உள்ளனர். சென்னையில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு நேரில் சென்று புத்தாண்டு பரிசுகளை வழங்கி அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் நயன்தாரா. நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனும் உடன் சென்றிருந்தார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... பிரின்ஸ் பட தோல்விக்கு பொறுப்பேற்று... நஷ்ட ஈடு வழங்கிய சிவகார்த்திகேயன் - எத்தனை கோடி கொடுத்தார் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios