பிரின்ஸ் பட தோல்விக்கு பொறுப்பேற்று... நஷ்ட ஈடு வழங்கிய சிவகார்த்திகேயன் - எத்தனை கோடி கொடுத்தார் தெரியுமா?
தீபாவளிக்கு ரிலீசான பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு பொறுப்பேற்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து நஷ்ட ஈடு வழங்கி உள்ளார்.
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து சாதித்த பிரபலங்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் பல்வேறு சின்னத்திரை நட்சத்திரங்கள் இவர் தான் ரோல் மாடலாக இருந்து வருகிறார். அஜித், விஜய்க்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் தான் என சொல்லும் அளவுக்கு இவரது சினிமா கெரியர் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
டாக்டர், டான் என அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன், பிரின்ஸ் படம் மூலம் ஹாட்ரிக் ஹிட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆன இப்படம் படு தோல்வியை சந்தித்தது. அனுதீப் இயக்கியிருந்த இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்திருந்தார்.
இதையும் படியுங்கள்... 'கே.ஜி.எஃப்'... 'காந்தாரா' கொடுத்த உற்சாகம்..! திரையுலகில் மூவாயிரம் கோடி முதலீடு செய்யும் ஹோம்பாலே பிலிம்ஸ்!
மோசமான திரைக்கதை மற்றும் காமெடி காட்சிகள் சொதப்பியதே இப்படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது. தமன் இசையமைத்திருந்த இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தன. இப்படத்தை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு பொறுப்பேற்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து நஷ்ட ஈடு வழங்கி உள்ளார். அதன்படி இப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு ரூ.12 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதனை ஈடுகட்டும் விதமாக சிவகார்த்திகேயன் ரூ.3 கோடி, தயாரிப்பு நிறுவனம் ரூ.3 கோடி என மொத்தம் ரூ.6 கோடி நஷ்ட ஈடாக வழங்கி உள்ளனர்.
இதையும் படியுங்கள்... 'பாய்ஸ்' பட லுக்கில் ஜொலிக்கும் ஜெனிலியா! 20 வருட திரைப்பயணத்தை கணவர் ரித்தீஷ் தேஷ்முக்குடன் கொண்டாடிய போட்டோஸ