வா தலைவா... 'வாரிசு' படத்தின் ட்ரைலர் ரிலீஸ் எப்போது? வெளியான மாஸ் அப்டேட்..!

விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியள்ளது.
 

varisu trailer release date officially announced

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில்... இதற்கான அப்டேட்டை சற்று முன்னர் படக்குழு வெளியிட்டுள்ளது.

தளபதி விஜயின் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அளவு கடந்த எதிர்பார்ப்பு உள்ளது. விஜய் நடிக்கும் படத்திலிருந்து போஸ்டர் ஒன்று வெளியானாலே, அதனை மிக பிரம்மாண்டமாக வரவேற்கும் ரசிகர்கள் மத்தியில் படத்தின் ட்ரைலரே.... வெளியாகிறது என்றால் சொல்லவா வேண்டும்? ட்ரைலருகே கட்டவுட் வைத்து, வெறித்தனமாக வரவேற்பார்கள்.

varisu trailer release date officially announced

புத்தாண்டை முன்னிட்டு 'வாரிசு' படத்தின் ட்ரைலர் வெளியாகும் என... காத்திருந்து ஏமார்ந்த ரசிகர்களை, உச்சாகமடைய செய்யும் விதமாக... நாளை மாலை 5 மணிக்கு விஜய் நடிப்பில் உருவாக்கிய 'வாரிசு' படத்தின் டிரைலர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை தற்போது தளபதியின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெயின் செய்து வருகின்றனர்.

சென்சாரில் யு சான்றிதழை தட்டி தூக்கிய 'வாரிசு' திரைப்படம்!

விஜய் 'பீஸ்ட்' படத்தை தொடர்ந்து மிகவும் ஸ்டைலிஷ் ஆன வேடத்தில் தளபதி நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம்  குடும்ப செண்டிமெண்ட்டை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ளது.  இந்த படத்தில் விஜய்யின் நடிப்பு இதுவரை பார்த்த படங்களை விட மிகவும் வித்தியாசமாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதே போல்  இந்த படத்தின் மூலம் முதல் முறையாக தெலுங்கு இயக்குனரின் படத்தில் தளபதி விஜய் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

varisu trailer release date officially announced

ஏற்கனவே 'வாரிசு' படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், கண்டிப்பாக டிரைலரும் வேறு லெவலுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா முதல்முறையாக நடித்துள்ளார்.மேலும் சரத்குமார், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா, பிரபு, குஷ்பூ, ஷாம், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இந்த திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

விவாகரத்து பின் ஹீரோயின்களுக்கே சவால் விடும் அழகில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! லைக்குகளை குவிக்கும் போட்டோ!

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SunTV (@suntv)

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios