விவாகரத்து பின் ஹீரோயின்களுக்கே சவால் விடும் அழகில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! லைக்குகளை குவிக்கும் போட்டோ!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள், ஐஸ்வர்யா விவாகரத்துக்கு பின்னர்... ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் வெளியிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, கண்ணை கவரும் அழகிய உடையில்... நியூ இயர் மற்றும் தன்னுடைய பிறந்தநாள் அன்று எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 2012 ஆம் ஆண்டு '3' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானர். இந்த படத்தில்,தன்னுடைய கணவர் தனுஷையே ஹீரோவாக வைத்தும், ஹீரோயினாக நடிகை ஸ்ருதிஹாசனை வைத்தும் இயக்கி இருந்தார். கலவையான விமர்சனங்களுடன், சுமாரான வெற்றி பெற்ற, இந்த திரைப்படம் சமீபத்தில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
'கயல்' சீரியலை விட்டு விலகுகிறாரா ஹீரோ சஞ்சீவ்? குழப்பத்தை ஏற்படுத்திய அதிர்ச்சி பதிவு..!
இதைத்தொடர்ந்து, வை ராஜா வை, சினிமா வீரன், போன்ற சில படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தன்னுடைய இரண்டு மகன்களை கவனித்துக் கொண்டு வருவகால், சில காலம் திரைப்பட பணிகளில் இருந்து விலகியே இருந்தார்.
இந்நிலையில் கடந்தாண்டு தன்னுடைய கணவர் தனுஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெறுவதாக ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் ஆகிய இருவருமே சமூக வலைதளம் மூலம் உறுதிப்படுத்திய நிலையில், தற்போது இவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோர் சந்தோஷத்திற்காக பள்ளி விழாக்களில் மட்டுமே இருவரும் ஒன்றாக கலந்து கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
இது ஒரு காவிய காதல்.... புத்தாண்டு பிறந்ததும் குட் நியூஸ் சொன்ன சமந்தாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்
நடிகர் தனுஷை விவாகரத்து செய்த பின்னர், தீவிரமாக உடற்பயிற்சி.. ஆன்மீகம்.. போட்டோ ஷூட்.. மற்றும் லால் சலாம் படங்களை இயக்கி வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஜனவரி 1 ஆம் தேதி, நியூ இயர் மற்றும் தன்னுடைய பிறந்தநாளை ஒரே நாளில் கொண்டாடினார்.
பிறந்தநாளிலேயே புத்தாண்டை இவர் வணங்கி வரவேற்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுளளார். இதில் மிகவும் ஸ்டைலிஷாக இருப்பதுடன், ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் அழகில் ஜொலிக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலர் இவரின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து வருகிறார்கள்.