இது ராஷ்மிகா எடுத்த போட்டோ தான?.. புத்தாண்டு புகைப்படத்தால் ரசிகர்களிடம் வசமாக சிக்கிக் கொண்ட விஜய் தேவரகொண்டா
புத்தாண்டு வாழ்த்து சொல்லி, விஜய் தேவரகொண்டா பதிவிட்ட புகைப்படத்தை ராஷ்மிகா தான் எடுத்துள்ளார் என நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. அர்ஜுன் ரெட்டி படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர், ராஷ்மிகா மந்தனா உடன் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகின. இப்படத்தின் வெற்றிக்கு இவர்கள் இருவர் இடையேயான கெமிஸ்ட்ரியும் முக்கிய காரணம்.
தொடர்ந்து இரண்டு படங்களில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் ஜோடியாக நடித்ததால், இவர் இருவரும் காதலிப்பதாக தகவல் பரவியது. இதுகுறித்து எந்தவித பதிலும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்த இந்த ஜோடி, கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களுக்கு பின் ஜோடியாக நடிப்பதை தவிர்த்து வந்தனர்.
இருப்பினும் இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி, இவர்கள் குறித்த காதல் சர்ச்சையை மேலும் பரபரப்பாக்கியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும், ஜோடியாக மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றதாக கூறப்பட்டது. அப்போது மாலத்தீவில் எடுத்த புகைப்படங்களை ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஆனால் விஜய் தேவரகொண்டா ஒரு புகைப்படத்தை கூட பதிவிடவில்லை. இருப்பினும் ராஷ்மிகா பதிவிட்ட புகைப்படத்தில் அவர் விஜய் தேவரகொண்டாவின் கண்ணாடியை அணிந்திருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.
இதையும் படியுங்கள்... ஹீரோயின் போல் ஜொலிக்கும் அஜித் மகள்... குடும்பத்துடன் குதூகலமாக புத்தாண்டை கொண்டாடிய ஏகே - வைரலாகும் போட்டோஸ்
இந்நிலையில், தற்போது புத்தாண்டு வாழ்த்து சொல்லி, விஜய் தேவரகொண்டா பதிவிட்ட புகைப்படம், அவர்கள் இருவரும் மாலத்தீவுக்கு ஜோடியாக சென்றதை உறுதிசெய்யும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். கையில் சரக்கு பாட்டிலுடன் நீச்சல் குளத்தில் குளித்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.
இது தற்போது எடுத்த புகைப்படம் இல்லை என்றும், கடந்த அக்டோபர் மாதம் ராஷ்மிகா உடன் மாலத்தீவு சென்றபோது எடுத்த புகைப்படம் என்றும் நெட்டிசன்கள் கண்டுபிடித்துவிட்டனர். அதுமட்டுமின்றி ராஷ்மிகா அப்போது பதிவிட்ட புகைப்படமும், விஜய் தேவரகொண்டாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தின் பின்னணியும் ஒரே மாதிரி இருப்பதை சுட்டிக்காட்டி, மண்ட மேல இருக்க கொண்டய மறந்துட்டீங்களே பாஸ் என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... கணவருடன் பாரில் குடியும்... கும்மாளமாக... நியூ இயர் கொண்டாடிய ஹன்சிகா! வைரலாகும் போட்டோஸ்!