கணவருடன் பாரில் குடியும்... கும்மாளமாக... நியூ இயர் கொண்டாடிய ஹன்சிகா! வைரலாகும் போட்டோஸ்!
நடிகை ஹன்சிகா இந்த வருட புத்தாண்டை தன்னுடைய கணவருடன் பாரில் இருந்தபடி வரவேற்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான ஹன்சிகாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மிகவும் பிரமாண்டமாக ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த முண்டோடா அரண்மனையில் திருமணம் முடிந்த நிலையில் இந்த வருட புத்தாண்டை தன்னுடைய கணவருடன் ஹன்சிகா வரவேற்றுள்ளார்.
பாரில் இருந்தபடி, மிகவும் ஸ்டைலிஷான உடையில்... ஹன்சிகா கொண்டாடிய நியூ இயர் ஸ்பெஷல் போட்டோசை அவரே சமூக வலைத்தளத்தில் வெளியிட படு வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, லைக்குகளையும் குவித்துள்ளது.
கணவர் சோஹேல் கத்தூரியா ஒரு கையில்... சரக்கை வைத்து கொண்டு, ஹன்சிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். எனவே இந்த வருட புத்தாண்டு... ஹன்சிகாவிற்கு குடியும்... கும்மாளமுமாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறி, தங்களின் வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள்.
திருமணமான கையேடு மீண்டும் நடிக்க உள்ளதால்... ஹனி மூன் செல்ல நேரம் இல்லை என கூறிய ஹன்சிகா திடீர் என தன்னுடைய, சமீபத்தில் ஹனி மூன் சென்ற புகைப்படங்களை வெளியிட அது வைரலானது. இதை தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ஓடிடி-யில் 'தி லெஜன்ட்'..! சரவணன் அண்ணாச்சி போட்ட பரபரப்பு பதிவு!