2022-ல் மட்டும் நயன் - விக்கி வாழ்க்கையில் இவ்வளவு நல்லது நடந்ததா? 5 பாகங்களாக பகிர்ந்த தகவல்! வைரல் போட்டோஸ்!
இயக்குனர் விக்னேஷ் சிவன் - மற்றும் நயன்தாரா வாழ்க்கையில் உண்மையிலே 2022 ஆம் ஆண்டு மிகவும் முக்கிய வருடமாக இடம்பிடித்தது. இது குறித்து 5 பாகங்களாக பிரித்து, விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
விக்னேஷ் சிவன் தன்னுடைய முதல் பாகத்தில், தன்னுடைய வாழ்க்கை துணையான நயன்தாராவை திருமணம் சேட்டு கொண்டதை தான் தெரிவித்துள்ளார்.
நடிகையும், தன்னுடைய காதலியான நயன்தாராவை அனைவரின் ஆசீர்வாதத்துடன் கரம் பிடித்ததாகவும், இதில் பல லெஜெண்ட்ஸ் மற்றும் சூப்பர் ஸ்டார்கள் கலந்து கொண்டு வாழ்த்தியதை குறிப்பிட்டுள்ளார்.
நயந்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு, ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
ஓடிடி-யில் 'தி லெஜன்ட்'..! சரவணன் அண்ணாச்சி போட்ட பரபரப்பு பதிவு!
விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் முதலில் திருப்பதியில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் பின்னர் ஒரு சில காரணங்களால் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்து முடிந்தது.
கண்ணாடி மாளிகையில் கண் கவர் சிவப்பு புடவையில், தேவதை போல் மணக்கோலத்தில் இருந்த நயன்தாராவை, தன்னுடைய குடும்ப வழக்கத்தின்படி திருமணம் செய்து கொண்டார் விக்னேஷ் சிவன். இதில் கோலிவுட் நட்சத்திரங்கள் மட்டுமின்றி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் அஜித்தின் மனைவி ஷாலினி, அவருடைய தங்கை, மகள், என கோலிவுட் திரை உலகின் உச்சகட்ட நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
தன்னுடைய இரண்டாவது பாகம் என விக்னேஷ் சிவன் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளது தன்னுடைய, இரட்டை குழந்தைகளை பற்றிய பதிவை தான்.
நான் ஒவ்வொரு முறையும் என் மகன்களை பார்த்து ஆனந்த கண்ணீர் விட வைக்கும் இரண்டு குழந்தைகளை தனக்கு கொடுத்ததற்கு கடவுளுக்கு நன்றி கூறுவதாக தெரிவித்துள்ளார்.
திருமணம் செய்து கொண்ட இதே ஆண்டு... திருமணமான 4 மாதத்திலேயே வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.
இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பின்னர் முறையாக அனைத்து விதிமுறைகளையும் கடைபிடித்து தான் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தமிழக அரசு சார்பில் நியமித்த விசாரணை குழு தெரிவித்தது.
இந்த தகவலுடன் தங்கள் இரு குழந்தைகளின் கைகளை பிடித்தவாறு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.
தன்னுடைய மூன்றாவது பாகம் என விக்னேஷ் சிவன் கூறி உள்ளது இவர் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் வெற்றி குறித்து தான்.
நானும் ரவுடி தான் படத்திற்கு பின்னர் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளியான திரைப்படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. இதில் நயன்தாராவுக்கு இணையான மற்றொரு ஹீரோயினாக சமந்தாவும் நடித்திருந்தார்.
இந்த படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், இப்படம் கமர்சியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றதை நினைவு கூர்ந்து உள்ளார்.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள், இசையமைப்பாளர் அனிருத் ஆகியவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், வெளியிட்டு தன்னுடைய நன்றிகளை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
தன்னுடைய நான்காவது பாகம் என மறக்க முடியாத தருணத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன், கூறியுள்ளதாவது, இந்த ஆண்டு தமிழ்நாடு சார்பில் சென்னை மகாபலிபுரம் அருகே நடந்த செஸ் ஒலிம்பியா போட்டியை தான்.
நயன்தாராவை திருமணம் செய்த ஒரு மாதத்திலேயே, இந்த செஸ் ஒலிபியான் போட்டி நடத்தப்பட்ட நிலையில், இந்தப் போட்டியை விக்னேஷ் சிவன் தான் ஒருங்கிணைப்பாளராக இருந்து மிகப் பிரமாண்டமாக வெற்றிகரமாக நடந்தி முடித்தார்.
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். மேலும் இந்த போட்டியின் முடிவு நாளில், பாரத பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு க. ஸ்டாலின் , உலகநாயகன் கமல்ஹாசன், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியின் போது தன்னுடைய குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட சில மறக்க முடியாத புகைப்படங்களையும் வெளியிட்டு... இது குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
தன்னுடைய ஐந்தாவது பாகமாக விக்னேஷ் சிவன் கூறி உள்ளது, 'கனெக்ட்' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றி குறித்து தான்.
விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'கனெக்ட்' படத்தின் வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த பதிவை போட்டுள்ளார்.
மேலும் இந்த வருடம் முழுவதும் தனக்கு மிகவும் வெற்றிகரமான ஆண்டாக அமைந்ததாகவும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
அதேபோல் 'கனெக்ட்' படத்தின் ப்ரோமோஷன் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.