'கயல்' சீரியலை விட்டு விலகுகிறாரா ஹீரோ சஞ்சீவ்? குழப்பத்தை ஏற்படுத்திய அதிர்ச்சி பதிவு..!
'கயல்' சீரியலில் ஹீரோவாக நடித்த வரும் சஞ்சீவ், இந்த சீரியலை விட்டு விலக உள்ளதாக வெளியாகி உள்ள தகவல், அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
சன் டிவி தொலைக்காட்சியில், பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' சீரியல், தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதோடு, 2022 ஆம் ஆண்டுக்கான டி ஆர் பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்த, சீரியல் என பெருமையை பெற்றது.
குடும்ப சென்டிமெண்ட், காதல், போட்டி, பொறாமை, என அனைத்தும் கலந்த கலவையாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும், இந்த தொடரில் பிரபல சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி 'கயல்' என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
டேட்டிங் சென்றபோது... பிரபல நடிகருக்கு லிப்லாக் கிஸ் கொடுத்த தமன்னா - காட்டுத்தீ போல் பரவும் வீடியோ
வில்லியாக பல சீரியல்களில் சைத்ரா ரெட்டி நடித்திருந்தாலும், 'கயல்' சீரியலில் நடித்த பின்னர், இவருக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்துள்ளது. இந்த சீரியலில் குடும்பத்தை காப்பாற்ற போராடும் செவிலியர் வேடத்தில் சைத்ரா ரெட்டி நடித்துள்ளார். மேலும் எப்படியும் தன்னிடம் அடிபணிந்து போக வேண்டும், தன்னுடை அண்ணன் குடும்பம் தன்னிடம் கையேந்தி நிற்க வேண்டும் என நினைக்கும், பெரியப்பாவை உதவியை நாடாமல்... எப்படி தன்னுடைய குடும்பத்தை 'கயல்' காப்பாற்றுகிறார்.
அதற்கு இடையில் பல ரூபங்களில் வரும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார்? என்பதே விறுவிறுப்பாக கூறி வருகிறார் இயக்குனர். இந்த சீரியலில் சைத்ரா ரெட்டிக்கு ஜோடியாக, விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' சீரியல் மூலம் பிரபலமான சஞ்சீவ் ஹீரோவாக வருகிறார்.
தொடர்ந்து ஏமாறும் ரசிகர்கள்: தளபதி விஜய்யின் வாரிசு டிரைலர் எப்போது வரும்?
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாகவே இவர் சீரியலில் காணப்படாத நிலையில், திடீரென இவர் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக சமூக வலைதளத்தில் ஒரு பதிவு வைரலாக பரவியது. இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வெளியிட்டு இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்பது போன்ற ஒரு பதிவை சஞ்சீவ் வெளியிட்டுள்ளார். இப்பதிவு ரசிகர்கள் சிலரை குழப்பமடைய செய்துள்ள போதிலும், இது உண்மையா? என பல ரசிகர்கள் அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால் தற்போது வரை இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், சஞ்சீவ் இந்த சீரியலை விட்டு விலகுவதாக வெளியானது வதந்தியாகவே பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா ஜோடி துபாய்க்கு வெகேஷன் சென்றுள்ளதால், விரைவில் சீரியல் தொடரில் இணைவார் என கூறப்படுகிறது. எனினும் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.