சென்சாரில் யு சான்றிதழை தட்டி தூக்கிய 'வாரிசு' திரைப்படம்!
தளபதி விஜய் நடித்துள்ள 'வாரிசு' படத்தின் சென்சார் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
'பீஸ்ட்' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில். அவ்வபோது இந்த படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாக்கியுள்ள, தகவலின் படி விஜய்யின் 'வாரிசு' படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.
மேலும் இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் என கூறப்படுகிறது. ஆனால் ரன்னிங் டைம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. விஜய் நடித்த முடித்துள்ள 'வாரிசு' திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக 'நேஷனல் கிரிஷ்' ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், சம்யுக்தா, சங்கீதா, ஜெயசுதா, பிரபு, சரத்குமார், ஷாம், போன்ற பலர் நடித்துள்ளனர் .
குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் நடந்த நிலையில், இந்த நிகழ்ச்சி புத்தாண்டை முன்னிட்டு சன் டிவியில் ஒளிபரப்பானது. அதே நேரம் 'வாரிசு' படத்தின் டிரைலர் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், விரைவில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக உள்ள 'வாரிசு' திரைப்படம் சென்சாரி 'யு' சான்றிதழை பெற்றுள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர்... அஜித் - விஜய் ஆகியோர் நடித்த படங்கள் பொங்கல் பண்டிகையில் நேருக்கு நேராக மோத உள்ளதால்... இரு தரப்பு ரசிகர்களும் துணிவு மற்றும் வாரிசு ஆகிய படங்களை வரவேற்க கார்த்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
'கயல்' சீரியலை விட்டு விலகுகிறாரா ஹீரோ சஞ்சீவ்? குழப்பத்தை ஏற்படுத்திய அதிர்ச்சி பதிவு..!