- Home
- Cinema
- Attakathi Dinesh : அம்பலமான அட்டக்கத்தி தினேஷின் ரகசிய காதல்... அவர் காதலிக்கும் அந்த தொகுப்பாளினி யார்?
Attakathi Dinesh : அம்பலமான அட்டக்கத்தி தினேஷின் ரகசிய காதல்... அவர் காதலிக்கும் அந்த தொகுப்பாளினி யார்?
Attakathi Dinesh Love Story : நடிகர் அட்டக்கத்தி தினேஷ், தன்னை காதலிக்கும் விஷயத்தை பிரபல தொகுப்பாளினி சமூக வலைதளம் வாயிலாக அறிவித்துள்ளார். அவரின் பதிவு வைரலாகி வருகிறது.

Attakathi Dinesh Love Story
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் அட்டக்கத்தி தினேஷ். பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'அட்டக்கத்தி' திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர், தொடர்ந்து பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வந்தார்.
'குக்கூ', 'விசாரணை', 'கபாலி', 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க படங்களாக அமைந்தன. சமீபத்தில் வெளியான 'லப்பர் பந்து' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, அட்டக்கத்தி தினேஷ் என்ற அடையாளத்தைத் தாண்டி 'கெத்து தினேஷ்' என்ற பெயரும் அவருக்கு கிடைத்தது.
தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வேட்டுவம்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுதவிர, தனது 26ஆவது படமான 'பந்தா கேங்ஸ்' திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
தினேஷின் காதலி யார்?
சினிமாவில் பிஸியாக நடித்து வரும் தினேஷ், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவ்வப்போது சில தகவல்களைப் பகிர்ந்து வந்தார். குறிப்பாக, தான் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் சில நேர்காணல்களில் சூசகமாகத் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் காதலிக்கும் பெண் யார் என்பது குறித்து இதுவரை வெளிப்படையான தகவல் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், விஜே எழிலரசி தனது சமூக வலைதளப் பதிவு மூலம் தினேஷ் மீதான காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
பிறந்தநாளில் காதலை வெளிப்படுத்திய விஜே எழிலரசி!
தினேஷின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை விஜே எழிலரசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன் அவர் எழுதியுள்ள காதல் நிறைந்த வாழ்த்துச் செய்தி தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்தப் பதிவில், தினேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள எழிலரசி, வாழ்க்கையில் எத்தகைய ஏற்ற இறக்கங்கள் வந்தாலும் ஒவ்வொரு முறையும் அவரையே தனது துணையாகத் தேர்ந்தெடுப்பேன் என்ற அர்த்தத்தில் தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த விஜே எழிலரசி?
பொறியியல் பட்டதாரியான விஜே எழிலரசி, நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறார். தனியார் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதுடன், திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்களையும் நேர்காணல் செய்துள்ளார். இந்நிலையில், தினேஷுடன் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களும் காதல் பதிவும் இருவரது உறவு குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருப்பினும், திருமண தேதி அல்லது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. திரையில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் ரசிகர்களைக் கவர்ந்து வரும் கெத்து தினேஷின் காதல் வாழ்க்கை குறித்த இந்தத் தகவல் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
2024 - சூர்யா முதல் அட்டகத்தி தினேஷ் வரை; நடிப்பில் அசர வைத்த டாப் 10 ஹீரோக்கள்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

