- Home
- Cinema
- 'லப்பர் பந்து' வெற்றிக்கு பின் 7 மடங்கு சம்பளத்தை உயர்த்திய அட்டகத்தி தினேஷ்; அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்!
'லப்பர் பந்து' வெற்றிக்கு பின் 7 மடங்கு சம்பளத்தை உயர்த்திய அட்டகத்தி தினேஷ்; அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்!
நடிகர் அட்டகத்தி தினேஷ், அதிரடியாக தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி உள்ளதால் இவரை கமிட் செய்ய வரும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து விடுவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஈ படத்தின் மூலம் கேரியரை துவங்கிய அட்டகத்தி தினேஷ்
சென்னையைச் சேர்ந்த நடிகர் அட்டகத்தி தினேஷ், இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் ஜீவா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான 'ஈ' திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் சப்போர்ட்டிங் ஆக்டராக அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து எவனோ ஒருவன், ஆடுகளம், மௌன குரு, போன்ற திரைப்படங்களில் சிறிய சிறிய வேடத்தில் நடித்தார். இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக எந்த ஒரு கவனத்தையும் பெற்று தரவில்லை.
பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்த அட்டகத்தி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது
சில வருடங்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'காதலிக்க நேரமில்லை' தொடரிலும் நடித்த தினேஷுக்கு ஹீரோ என்கிற அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது, இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நடிப்பில் வெளியான 'அட்டகத்தி' திரைப்படம். இந்த படத்தில் தினேஷ் நடித்து பிரபலமானதால், இவரை ரசிகர்கள் படத்தின் அடைமொழியோடு சேர்த்து , 'அட்டகத்தி' தினேஷ் என்றே அழைக்க துவங்கினர். இந்த படம் இவருக்கு மட்டும் இன்றி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
நடிகை பார்வதி நாயருக்கு கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்தம்; மாப்பிள்ளை யார் தெரியுமா?
சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அட்டகத்தி தினேஷ்
இந்த படத்தில் நடித்ததற்காக, தினேஷின் பெயர் விஜய் அவார்ட்ஸ் மற்றும் சைமா விருதுகளில் நாமினேட் செய்யப்பட்டது. இந்த படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற எதிர் நீச்சல் திரைப்படத்தில் நடித்தார். அதே போல் பண்ணையாரும் பத்தினியும், திரைப்படத்திலும் இவருடைய கேமியோ ரோல் கவனிக்கப்பட்டது.
சிறந்த கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அட்டக்கத்தி தினேஷ், 2014 ஆம் ஆண்டு ராஜு முருகன் இயக்கத்தில் நடித்த 'குக்கூ' திரைப்படத்தில் கண் தெரியாதவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் இவருடைய நடிப்புக்கு தீனி போடும் விதத்தில் அமைந்திருந்தாலும், இவருக்கு உடல் ரீதியாக பல பிரச்சனைகள் வரவும் காரணமாக அமைந்தது. இந்த படத்திற்காக இவர் மாறுகண் போல், வைத்து கொண்டு நடித்ததால், இவருடைய கண்கள் சுமார் நான்கு வருடங்கள் அப்படியே இவரின் கண் நின்று விட்டது. இதை மாற்றுவதற்காக பல்வேறு சிகிச்சைகள் எடுத்துக்கொண்டார் தினேஷ்.
குக்கூ படத்தில் நடித்ததால் ஏற்பட்ட பிரச்சனை
தீவிர தலைவலியால் அவதிப்பட்டு வந்த தினேஷ் சில வருடங்கள் நடிப்புக்கு பிரேக் விட்டாலும், இவர் நடிப்பில் முன்பு எடுக்கப்பட்ட படங்களே அடுத்தது... இடைப்பட்ட வருடங்களில் வெளியானது. சமீபத்தில் கூட இவருடைய கண்ணில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து, இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அதாவது இயக்குனர் ராமிடம் தான் அசிஸ்டன்ட் ஆக வேலை செய்த போது அட்டகத்தி தினேஷ் குக்கூ படத்தில் ஆடியோ லான்ச் அழைப்பிதழை எடுத்துக்கொண்டு அங்கு வந்த போது அவரின் கண்கள் அப்படியே தான் இருந்தது என தெரிவித்துள்ளார்.
லப்பர் பந்து பட வெற்றி
தீவிர சிகிச்சைக்கு பின்னர் மெல்ல மெல்ல தன்னுடைய கண்களை சரி செய்து கொண்டு தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த துவங்கினார். அப்படி இவர் நடித்த விசாரணை திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதே போல் கபாலி படத்திலும் துறுதுறு என இருக்கும் இளைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'ஜே பேபி' மற்றும் 'லப்பர் பந்து' ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக தமிழரசன் பச்சமுத்து இயக்கி இருந்த லப்பர் பந்த திரைப்படத்தில், 20 வயது பெண்ணிற்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அட்டகத்தி தினேஷ். இவருக்கு ஜோடியாக சுவாசிக்கா நடிக்க. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் நடித்திருந்தனர்.
சம்பளத்தை உயர்த்திய அட்டகத்தி தினேஷ்:
தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் அட்டகத்தி தினேஷ், தற்போது 'கருப்பு பல்சர்' மற்றும் இன்னும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார். மேலும் தற்போது வெளியாகியுள்ள தகவலில், 'லப்பர் பந்து' திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர், தன்னுடைய சம்பளத்தையும் தாறுமாறாக உயர்த்தி உள்ளாராம் தினேஷ். இதுவரை ஒரு கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்று வந்த தினேஷ், லப்பர் பந்து வெற்றிக்கு பின்னர் ரூ. 8 கோடியாக சம்பளத்தை உயர்த்தி உள்ளார். இந்த தகவல் இவரை புக் பண்ண வரும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாம்.
'ஜன நாயகன்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் எப்போது? தீயாக பரவும் தகவல்!