விஷாலின் 'மத கஜ ராஜா' தெலுங்கில் மோசமான தோல்வி!
தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 'மத கஜ ராஜா' படம், தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியான நிலையில் அங்கு தோல்வியை தழுவி உள்ளதாக கூறப்படுகிறது.

மதகஜராஜா தெலுங்கு படத்தின் ரிலீஸ்
பொதுவாக மற்ற மொழிகளில் வெற்றி கண்ட படங்கள், தமிழிலும்... தமிழில் வெற்றி பெற்ற படங்களை தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடுவதை தயாரிப்பாளர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இப்படி வெளியாகும் பல படங்களுக்கு மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அந்த வகையில் பொங்கலுக்கு தமிழில் வெளியான 'மத கஜ ராஜா' படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இந்த படத்தை தெலுங்கில் டப் செய்து ஜனவரி 31 அன்று வெளியிட்டனர்.
தெலுங்கில் தோல்வியை சந்தித்த மதகஜராஜா திரைப்படம்
விஷாலுக்கு தமிழில் எப்படி ரசிகர்கள் உள்ளார்களே, அதே போல் தெலுங்கு திரையுலகிலும் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர் நடிப்பில் வெளியான துப்பறிவாலன், மார்க் ஆண்டனி போன்ற படங்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் தான் தமிழில் 12 வருடங்களுக்கு முன் விஷால் - சுந்தர் சி காம்போவில் வெளியாகி 50 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி பெற்ற... 'மதகஜ ராஜா' திரைப்படம் தெலுங்கிலும் வெளியிடப்பட்டது.
'ஜன நாயகன்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் எப்போது? தீயாக பரவும் தகவல்!
சொல்லிக்கொள்ளும்படி கூட வசூல் செய்யவில்லை:
இந்த படத்தில், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் கதாநாயகிகளாக நடிக்க, மறைந்த நடிகர் மணிவண்ணன், மனோ பாலா, மயில் சாமி ஆகியோரும் நடித்திருந்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. 'மதகஜ ராஜா' படத்தின், வசூல் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகாத நிலையில்... இதற்க்கு சொல்லி கொள்ளும் படி குறைந்த பட்ச வசூலை கூட இப்படம் தெலுங்கில் வசூல் செய்யாதது தான் காரணம் என கூறப்படுகிறது.
மதகஜராஜா தோல்வியின் காரணம்
தெலுங்கில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சோனு சூட் போன்ற இந்த படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் மார்க்கெட் உள்ளது. ஆனால் தெலுங்கு ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்காததன் காரணம் பிடிக்காததற்குக் காரணம்... இந்த படத்தின் காமெடி அங்கிருக்கும் ரசிகர்களுக்கு நெருடலை ஏற்படுத்தியது தான் காரணம் என கூறப்படுகிறது. அதே போல் படம் வெளியான அன்றே... இந்த படத்தின் HD பிரிண்ட் தமிழ் டாக்கர்ஸ் தளத்தில் வெளியானதும் இப்படம் அங்கு தோல்வியடைந்ததற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
விக்ரமின் தங்கலான் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்: மாஸ் காட்டும் சூப்பர் ஹீரோ!