அட்டகத்தி தினேஷ் கலக்கிய ‘லப்பர் பந்து’ கெத்து கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது இந்த மாஸ் நடிகரா?
தமிழரசன் பச்சைமுத்து இயக்கிய லப்பர் பந்து திரைப்படத்தில் கெத்தி கேரக்டரில் அட்டகத்தி தினேஷுக்கு முன்னதாக நடிக்க இருந்த நடிகர் பற்றி பார்க்கலாம்.
Lubber Pandhu
தமிழ் சினிமாவில் கிரிக்கெட் சம்பந்தமாக வெளிவரும் படங்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. இதற்கு முன்னர் கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளிவந்த சென்னை 28, ஜீவா, ஜெர்ஸி, எம்.எஸ்.தோனி தி அண்டோல்டி ஸ்டோரி போன்ற படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. அந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்துள்ள திரைப்படம் தான் லப்பர் பந்து. இப்படம் திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வருகிறது.
Lubber Pandhu Movie Stills
இயக்குனர் அருண்ராஜா காமராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தமிழரசன் பச்சைமுத்து என்பவர் தான் லப்பர் பந்து படத்தை இயக்கி உள்ளார். அவர் இயக்கும் முதல் படமும் இதுவாகும். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருந்த இப்படத்தில் சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருந்தனர். மேலும் பால சரவணன், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
Lubber Pandhu Movie news
லப்பர் பந்து திரைப்படம் வழக்கமான கிரிக்கெட் படமாக இல்லாமல் இதில் கமர்ஷியல் அம்சங்கள் சற்று தூக்கலாகவே இருந்தன. குறிப்பாக கேப்டன் விஜயகாந்த் ரெபரன்ஸ் தொடங்கி, ஹரிஷ் - தினேஷ் இடையேயான ஈகோ மோதல் வரை அனைத்து காட்சிகளும் படத்தை தூக்கி நிறுத்தின. ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் படத்துக்கு பக்க பலமாக அமைந்தது. செப்டம்பர் 20ந் தேதி திரைக்கு வந்த லப்பர் பந்து திரைப்படம் இரண்டு வாரங்களை கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்... ரஜினி படத்துக்காக வாலி எழுதிய பாடல் வரிகள்; பிரபல கோவில் கல்வெட்டில் செதுக்கப்பட்டதன் சுவாரஸ்ய பின்னணி!
SJ Suryah is the first choice for Lubber Pandhu movie
கார்த்தியின் மெய்யழகன், ஜுனியர் என்.டி.ஆரின் தேவரா போன்ற படங்கள் ரிலீஸ் ஆன போதும் அதற்கு போட்டியாக தமிழ்நாட்டில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது லப்பர் பந்து திரைப்படம். இப்படம் 10 நாட்களில் உலகளவில் ரூ.17 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. லப்பர் பந்து படத்தில் அதிக கொண்டாடப்பட்ட கேரக்டரில் அட்டக்கத்தி தினேஷ் நடித்த கெத்து கதாபாத்திரமும் ஒன்று. ஆனால் அதில் முதலில் நடிக்க இருந்தது அவர் இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா... அது தான் நிஜம்.
கெத்து கேரக்டரில் நடிக்க இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து முதன்முதலில் அணுகியது நடிகர் எஸ்.ஜே.சூர்யாவை தானாம். ஆனால் அவர் கைவசம் பல்வேறு படங்களுடன் பிசியாக இருந்ததால் லப்பர் பந்து படத்துக்கு அவரால் கால்ஷீட் ஒதுக்கமுடியாமல் போனது. இதையடுத்து தான் அட்டகத்தி தினேஷை அந்த கேரக்டரில் நடிக்க வைத்துள்ளார் இயக்குனர். படம் ரிலீஸ் ஆன பின் தான் தெரிகிறது, அந்த கெத்து கேரக்டரை தன்னைவிட யாராலும் செய்ய முடியாது என நிரூபித்து இருக்கிறார் தினேஷ்.
இதையும் படியுங்கள்... தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிக நீளமான பெயரை கொண்ட படம் எது தெரியுமா?