தனுஷை விவாகரத்து செய்த பின்... ஹீரோயின்களுக்கு நிகராக போட்டோ ஷூட்டில் கலக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
நடிகர் தனுஷை விவாகரத்து செய்த பின்னர், திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா... ஹீரோயின்களுக்கு நிகராக நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கோலிவுட் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பிரபல நடிகர் தனுஷை சுமார் 18 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மிகவும் சந்தோஷமான ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருந்த இவர்களுக்கு, யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற உள்ளதாக, இருவரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் மூலம் அறிவித்தது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் தங்களுடைய பிள்ளைகள் சந்தோஷத்திற்காக, அவ்வப்போது அவர்களின் பள்ளி விழாக்களில் இருவரும் ஒன்றாக சந்தித்துக் கொள்ளும் சம்பவங்களும் நிகழ்கிறது. எனினும் இவர்கள் தங்களுடைய விவாகரத்து முடிவை கைவிட்டு விட்டு சேர்ந்து வாழ உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.
அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் வருவாரா ரக்ஷிதாவின் கணவர்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
விவாகரத்துக்கு பின்னர் ஆன்மீகத்திலும், திரைப்பட பணிகளிலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முழு கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்து வரும் கிரிக்கெட்டை சம்மந்தப்படுத்திய 'லால் சலாம்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது இந்த படத்தின் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முன்னணி நடிகைகளுக்கு நிகராக போட்டோ ஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் கோட் சூட் மற்றும் சல்வார் அணிந்து, இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. 40 வயதிலும், இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும்... இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக இந்த போட்டோ ஷூட் அமைந்துள்ளதாக கமெண்டில் தெறிக்க விட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.