மயோசிட்டிஸ் நோயால் முடங்கிப் போன சமந்தா.. 'போராடிக் கொண்டே இருங்கள்' லேட்டஸ்ட் பதிவால் ஆறுதல் கூறும் ரசிகர்கள்
நடிகை சமந்தா லேட்டஸ்ட்டாக போட்டுள்ள ட்விட்டர் பதிவுக்கு ரசிகர்கள் தொடர்ந்து தங்களின் ஆறுதல்களை கூறி வருகின்றனர்.
திருமணத்திற்கு பின்னரும், முன்னணி நடிகையாக வலம் வந்து பல இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வந்தவர் சமந்தா. தற்போது மயோசிட்டிஸ் என்னும் அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். படுக்கையை விட்டு எழுந்து, தன்னுடைய அன்றாட வேலைகளை கூட சரிவர செய்து கொள்ள முடியாத நிலையில் சமந்தா இருப்பதாக சில தகவல்கள் வெளியான நிலையில், முதற்கட்டமாக இதற்கு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த இவர், அடுத்ததாக ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்வதற்காக தென் கொரியா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
மயோசிட்டிஸ் பிரச்சனைகான சிகிச்சை நாட்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகிக் கொண்டே செல்வதால், தற்போது படப்பிடிப்புகள் எதிலும் கலந்து கொள்ளாமல் முழு ஓய்வில் இருந்து வருகிறார். இவருக்கு இவருடைய பெற்றோர் மற்றும் நண்பர்கள் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.
சமீபத்தில் சமந்தா நடித்திருந்த 'யசோதா' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் கதையின் நாயகியாக இவர் நடித்திருந்தாலும் உடல் நிலை காரணமாக பெரிய அளவில் ப்ரோமோஷன் பணிகளில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தலா ஒரே ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.
அதில் தற்போது தனக்கு ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்தும், தன்னுடைய வாழ்க்கையில் எதிர்கொண்டு வரும் பிரச்சனை குறித்தும் கண் கலங்கியபடி சமந்தா பேசியது... ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடிகர் சமந்தாவுடன் 'மாஸ்கோவின் காவிரி' படத்தில் ஹீரோவாக நடித்திருந்த ராகுல் ரவீந்திரன் சமந்தாவுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதத்தில், போட்ட பதிவில் 'எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் நீ போராடிக் கொண்டே இருப்பாய்... இன்னும் போராடிக் கொண்டே இருப்பாய்... ஏனென்றால் நீ ஒரு இரும்பு பெண் உன்னை எதுவும் தோற்கடிக்காது, கஷ்டப்படுத்தாது, மாறாக அவை உன்னை இன்னும் சக்தி வாய்ந்தவளாக மாற்றும் என தெரிவித்திருந்தார்.
இவரின் இந்த பதிவுக்கு பதில் கொடுத்துள்ள சமந்தா 'இதை வாழ்க்கையில் போராடுகிறவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். போராடிக் கொண்டே இருங்கள், நீங்கள் இன்னும் பலமாக தயாராவீர்கள், இன்னும் திடமாக மாறி கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார் நடிகை சமந்தா ட்விட் செய்துள்ளார்.
வலியில் துடித்துக்கொண்டிருந்தாலும்.... மிகவும் வலிமையான பெண்ணாக மாறி சமந்தா எதிர்கொண்டு வருவதையும், அவருடைய தைரியமான வார்த்தைகளையும் கண்டு ரசிகர்கள் நெகிழியுடன், விரைவில் மயோசிட்டிஸ் பிரச்சனையில் இருந்து மீண்டு வர தங்களின் ஆறுதல்களை கூறி வருகிறார்கள்.