- Home
- Cinema
- 39 வயதிலும் அழகே பொறாமைப்படும் பேரழகு! மாடர்ன் குந்தவையாய் மயக்கும் நடிகை த்ரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
39 வயதிலும் அழகே பொறாமைப்படும் பேரழகு! மாடர்ன் குந்தவையாய் மயக்கும் நடிகை த்ரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
குறையாத அழகுடன், ரசிகர்களை கவர்ந்திழுத்து வரும் நடிகை த்ரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது.

தென்னிந்திய திரையுலகில் கிட்டத்தட்ட 19 வருடங்களாக ரசிகர்களை தன்னுடைய அழகால், வசீகரித்து வரும் நடிகை த்ரிஷா 'பொன்னியின் செல்வன்' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்குப் பின்னர், மீண்டும் தன்னுடைய பழைய இடத்தை பிடித்து விட்டது போல் மிகவும் எனெர்ஜிடிக்காக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் விஜய், அஜித், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்ட நடிகை த்ரிஷா 39 வயதிலும், அழகு குறையாத பேரழகியாய் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
சமீப காலமாக இவர் முன்னணி ஹீரோக்களுக்கு, ஹீரோயினாக நடிக்கும் படங்களை விட, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கும் படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனால் இப்படி இவர் நடித்து வந்த படங்கள் படு தோல்வியை சந்தித்ததால், இவரின் மார்க்கெட் சரசரவென குறைந்தது.
மேலும் அவ்வப்போது, இவருடைய திருமண பற்றிய தகவல்களும் சமூக வலைத்தளத்தில் வட்டமிட்ட நிலையில், த்ரிஷா திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது 'பொன்னியின் செல்வன்' திரைப்படம்.
இந்த திரைப்படத்திற்குப் பின்னர் இவருடைய மார்க்கெட் பல மடங்கு எகிறி உள்ள நிலையில், இவன் நடிப்பில் அடுத்ததாக 'ராங்கி' திரைப்படம் வரும் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.
மேலும் இந்த படத்தின் பிரமோஷன் பணிகளிலும் பட குழுவினர் தீவிரமாக தீவிரம் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த படத்தில் கதையின் நாயகியாக நடிகை த்ரிஷா நடித்துள்ள நிலையில், அதிரடி ஆக்சன் காட்சிகளிலும் டூப் போடாமல் கலக்கியுள்ளார்.
தற்போது ராங்கி படத்தின் பிரமோஷன் பணிகளில் கவனம் செலுத்தி வரும் த்ரிஷா, அப்போபோது சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சிவப்பு நிற உடையில், செம ஸ்டைலிஷாக நடிகை த்ரிஷா இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வேறு லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.